பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

சன்யாட்சன்

ஒரு காலத்தில் அபினி போதைக்கு அடிமைப்பட்டிருந்த சீனம், அந்த நாட்டின் மக்கள் சமூகத்தையோ, அரசியலையோ கவனிக்காமல் இருக்கவேண்டுமென்றுதான் வாளாயிருந்து விட்டது. அதையடக்கி ஆண்டு கொண்டிருந்த மஞ்சு அரசாங்கம், சீனர்களை சீனர்களாகவே மதிக்காத ஒரு வல்லரசு. தனக்கு அடிமைப்பட்டிருக்கும் எந்த நாடும் விழித்தெழக் கூட்ாது என்பதுதான் அதன் எண்ணமாயிருந்திருக்கிறது. அதளுல்தான் அந்த மக்கள் எக்கேடு கெட்டாலும் நாம் போடு கிற தீர்வையைச் செலுத்திக்கொண்டு, அடக்குமுறைகளைத் தாங்கிக்கொண்டு, எதிர்த்துப் பேச உரிமையில்லாமல் சட்டத் தின் மூலம் தடுத்து நிறுத்தும் கொடுங்கோன்மைதான் எந்த நாட்டிலும் நடந்தவண்ணமிருந்தது. அந்த அடிமைத்தளையை ஒடித்து, மக்களைத் தாங்கள் யார் என்று உணரச் செய்வதற்கு நெஞ்சுரம் பெற்ற சிலர் தேவைப்பட்டார்கள். சீனத்தின் விடு தலைக்காகப் போராட ஒரு சன்யாட்சன் கோன்றுவதற்கு முன்னல் அங்கே என்ன நடந்ததென்பதைப் பார்ப்போம்.

Clippers of China

வேலைகள் ஒழுங்காக நடைபெறுவதில்லை. நீதிமன்றங்கள் நடந்தாலும் நடக்கும்; நடக்காமலும் போகும். வழக்கறிஞர்