பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

உலக


வேத காலம் கி. மு. 2000-1000 இந்த காலத்தில்தான் அங்கு வாழ்ந்திருந்த ஆதி குடிகளை விரட்டியடித்தனர். பதினாலாவது நூற்றண்டு வரை கங்கைக் கரையில் பல அரசுகளை நிறுவினார்கள்.

இந்துமதம் என்பது எந்தத் தனிமனிதனாலும் கண்டுபிடிக்கப்பட்டதல்ல. அதனுடைய கொள்கைகள் எந்த கூட்டத்தாலும் ஆராய்ந்து எழுதப்பட்டவை அல்ல. வேதங்கள் அதன் மையமாக இருந்தன. பழைய ரிஷிகள், உபநிஷத்துக்களைச் சொல்லி, அதுவே ஏற்றுக்கொள்ளத்தக்கவை என்று முடிவு செய்யப்பட்டது. இந்த மாதிரிதான் வழிபடவேண்டும் என்ற வரையறையுமில்லை. ருக் வேதம், ‘உண்மை ஒன்றே-அது எந்த பெயராலும் அழைக்கலாம். பசுக்கள் எந்த நிறமாயிருந்தாலும் பால் வெள்ளையாக இருப்பதைப்போல்’ என்கின்றது.

ஆறு தலைப்புக்களைக் கொண்டது:- 1. சுருதி, 2. சிமிரிதி, 3. இதிகாசம், 4. புராணம். 5. ஆகமம், 6. தரிசனம், ரிக் வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்ற நான்கைத் தவிர வேறு எதனையும் அவர்கள் வாழ்ந்த பழைய இடத்திலிருந்துகொண்டு வரவில்லை. பிரம்மனின் முகத்திலே பிறந்தவன் பார்ப்பனன் என்றும், மார்பில் பிறந்தவன் சத்திரியன் என்றும், வயிற்றில் பிறந்தவன் வைசியன் என்றும், காலில் பிறந்தவன் சூத்திரன் என்றும், பார்ப்பனன் கூலி கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் சூத்திரன் வேலை செய்யக் கடமைப்பட்டவன் என்றும், பிராம்மணப் பெண்ணை ஒரு சூத்திரன் கெடுத்துவிட்டால் அவன் உயிர் நிலையை அறுக்க வேண்டும் என்றும், ஒருசூத்திரப் பெண்ணை பிராமணன் கெடுத்துவிட்டால் அவன் உச்சிக் குடுமியை அறுத்துவிட்டால் போதும் என்றும் எழுதி வைத்து விட்டார்கள். தீண்டாமையை நுழைத்தவர்கள்; கோயிலுக்குள் நுழையாதே என்றார்கள். பொதுக் குளங்களில், கிணறுகளில், தண்ணீர் எடுக்கக்கூடாதென்றார்கள். அக்ரகாரத்தில் நுழையும்போது மேல் வேட்டியோ காலணியோ இருக்கக் கூடாதென்றவர்கள் இந்த ஆரியர்கள்தான். இவர்களால்