பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120

உலகைத் திருத்திய


இவனுடைய நண்பன் லூயியும் இவனும் அரசியல் முறைகளைப் பற்றி ஆங்கிலத்தில் பேசிக் கொள்வார்கள். இவர்கள் முந்திய, தலைமுறையில் தைபிங் என்ற இடத்தில் ஹுலியுசுவான் என்பவனால் தோற்றுவிக்கப்பட்ட கலகம் பதினான்கு ஆண்டுகள் நடை பெற்றது. இறுதியில் அடக்கப்பட்டது. இதைப்பற்றி பெரியவர்கள் வெளிப்படையாகப் பேசிக்கொள்ள மாட்டார்கள். அவ்வளவு அச்சம் அவர்களுக்கு. காரணம் அதில் லட்சக் கணக்கான பேர் கொல்லப்பட்டார்கள். சில படித்த சிறுவர்கள் சன்னோடு சேர்ந்துகொண்டனர். ஒரு தெய்வ வழிபாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று பிரசாரம் செய்ய, ஆண்டவனால் அனுப்பப்பட்டவன் என்றும், இயேசுவின் சகோதரன் என்றும் சொல்லிக்கொண்டதால் இவனோடு ஒரு கூட்டம் சேர்ந்தது. இந்தக் கூட்டத்தை பக்குவமாக ஒரு புரட்சிக் கூட்டமாக மாற்றிக் கொண்டான்.

உள் நாட்டிலுள்ள மூடநம்பிக்கைகளையும், அதே நேரத்தில் மஞ்சு ஆட்சியையும் ஒழித்துவிட வேண்டுமென்றும் முடிவு கட்டிக்கொண்டார்கள். முதல் வேலையாக கோயிலில் இருந்த மூன்று சிலைகளில் ஒன்றுக்குக் கைவிரல் ஒடிந்து கிடந்தது. மற்றாேர் சிலைக்குத் தலையில் காயம் ஏற்பட்டிருந்தது. இதைக் கண்ட ஊர் மக்கள் அலறியடித்துக்கொண்டு போய் பார்த்துவிட்டு ‘ஐயோ, ஊருக்கு வந்துவிட்டது நாசம்; தெய்வ கோபத்திற்கு ஆளாய்விட்டது ஊர். இனி என்ன நேருமோ? யார் செய்திருப்பார்கள் இந்த அடாத செயலை?” என்று பேசிக்கொண்டிருந்தனர் அதை கேட்ட சிறுவர்கள் “லூயியும், சன்னும்தான் கோயிலிலிருந்து வெளிவந்தார்கள்.” என்றனர். ஆம்! அவர்களுடைய வேலையாகத்தான் இருக்கும். லூயி கிருஸ்தவன். அவனை ஒன்றும் செய்வதற்கில்லை. சன்னைத்தான் தண்டிக்க வேண்டுமென, அவன் தந்தையை அழைத்து “ஒன்று, உன் மகன் செய்த குற்றத்திற்காகப் பழுதுபட்டிருக்கும் சிலைகளைச் சரிசெய்தாக வேண்டும். மற்றொன்று உன் மகனை ஊரைவிட்டு ஓட்டவேண்டும்!! வேறு வழியில்லாமல் சென்னின் தந்தை, இரண்டையும் செய்து முடித்தான்.