பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124

உலகைத் திருத்திய

ஆதிக்கத்திருந்த தீவை விட்டு மீண்டும் மஞ்சு சர்க்காரின் கீழ் வர வேண்டியதாயிற்று. பிறகு வெகுதூரத்திலுள் டீன்ஸ்டின் நகர மருத்துமனையில் வேலை செய்யலாம் என்று கருதி, தன் நண்பனையும் அழைத்துக் கொண்டு செல்லவேண்டியதாயிற்று. போகவேண்டிய பாதை கரடுமுரடாகவும் போக்குவரத்து வசதியில்லாமலுமிருந்தது. கால்நடையாகவே வெகுதூரமும் படகில் சிறிது தூரமும் சென்றான். வழியில் சீனமக்கள் பட்டுக்கொண்டிருக்கிற துன்பத்தையெல்லாம் கண்டு, அவற்றைச் சீர் செய்யவேண்டும் என்று கோரி ஒரு விண்ணப்பத்தை அனுப்பினான். அது போய்ச் சேரவே இல்லை. இடையிலிருந்தவர்கள் அரசப் பிரதிநிதிக்கு அனுப்பவே இல்லை.

பிறகு, இவன் தனக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் மருத்துவம் செய்துவந்தான். இவன் கொடுத்த அறிக்கை ஓராண்டு கழித்து ஒரு பத்திரிக்கையில் வெளியாயிற்று. இந்த அறிக்கை வெளிவந்த பிறகு தன் கொள்கையை ஒளித்துப் பயனில்லை என்று கருதி, முழுநேர அரசியல்வாதியாய் மஞ்சு சர்க்காரை பகிரங்கமாகத் தாக்கிப் பேசத் தொடங்கினான். சீனாவில் எங்கேயும் அரசாங்கத்திற்கு எதிராகவோ, மதத்திற்கு எதிராகவோ பேசக்கூடாது. அந்த அளவுக்கு மஞ்சு அரசாங்கம் பயமுறுத்தி வைத்திருந்தது. என்றாலும், சுமார் 20 முதல் 50 லட்சம் வரை உறுப்பினர்களைக் கொண்ட இரகசிய சங்கங்கள் இயங்கின. சீனர்கள் பொதுவாகவே பத்திரிக்கையில் வருகின்ற செய்திகளை மதிப்பதுமில்லை. அந்த அளவுக்கு பயமுறுத்தப்பட்டிருந்தனர்.

முதற் புரட்சி

சீனத்தில் ஆயுத கிடங்குகளில் தவிர, பொறுப்பு வாய்ந்த சீன அதிகாரிகள் மாளிகைகளிலும் ஆயுதங்களை சேர்த்து வைத்திருப்பார்கள். ஆகையால் முதலில் மக்களின் துணை கொண்டு அந்த ஆயுதங்களை கைப்பற்றுவது, அவையும் போதவில்லையானால் ஆயுதக்கிடங்கை கைப்பற்றி ஒவ்வொரு ஊராக இப்படியே செய்துகொண்டுபோய், இறுதியில் பீகிங்