பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136

உலகைத் திருத்திய

இழுத்து, மிகப் பணிவோடு, “இராணுவத் தலைவனே! உம்மை ஒன்றும் செய்ய மாட்டோம்! எங்கள் புரட்சிப் படைக்குத் தலைமை தாங்கும், சீனா குடியரசு நாடாகிறது என்ற பிரகடனத்தை வெளியிடும்” என்று கேட்டுக்கொண்ட தற்கிணங்க, உடைகளைப் போட்டுக்கொண்டு வெளியே வந்து “மஞ்சு அரசாங்கம் ஒழிந்தது. விரைவில் குடியரசாகும். அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துகொண்டிருக்கும் சன்யாட் சென் திரும்பியவுடன் அவரைக் குடியரசுத் தலைவராக்கப் போகிறோம். இப்படிக்கு- மஞ்சு அரசாங்கத்தின் இராணுவத் தலைவன்” என்று வெளியிட்டான். அப்படியானால் அரசன் எங்கே? அவனுடைய பிரதிநிதிகள் எங்கே என்று கூட மக்கள் கேட்கவில்லை. “ஒழிந்தது பீடை” என்றிருந்துவிட்டனர். தலைவன் சன்னும் ஊரிலில்லை. அவன் பிரதிநதிகளும் ஊரிலில்லை. சன் லண்டனில் இருக்கும்போதே, மஞ்சு இராணுவத்தலைவனும் புரட்சிப்படையின் தலைவனும் சேர்ந்து, சீன குடியரசு என்று அறிவித்துவிட்டார்கள். மற்றப் பகுதிகளிலிருந்த மஞ்சு சர்க்காரின் இராணுவப் படைகள் ஆயுதங்களை அப்படியே போட்டுவிட்டு ஓடிவிட்டன. சில படைகள் புரட்சிப் படைகளோடு சேர்ந்துகொண்டன.

1911ல் சீனாவில் மொத்தம் இருபத்தெட்டு மாநிலங்கள் இருந்தன. அவற்றுள் தெற்கே இருந்த பதினான்கு மாநிலங்கள் புரட்சிப்படையின் கீழே வந்துவிட்டன. வடக்கே பெரிய பெரிய பணக்காரர்கள். செல்வான்களுக்கு பயமேற்படாதபடி “வெளிநாட்டுச் சீமான்களே! வணிகர்களே! உங்கள் மூலதனத்திற்கும் தொழிலுக்கும் எந்தவிதமான ஆபத்தும் சீனக் குடியரசால் ஏற்படாது” என்று முதலிலேயே அறிவித்து விட்டபடியால், புரட்சிப் படைகளுக்கு பண உதவி முதற்கொண்டு மற்ற உதவிகளும் செய்வதைத் தவிர வேறு வழியில்லை. இந்த அமளியில் குலை நடுங்கிப் போய் பீகிங் நகரத்திலிருந்து மட்டும் இரண்டு லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் தங்கள் வீடு வாசல்களைத் துறந்து மஞ்சூரியாவுக்கு ஓடிவிட்டார்கள். (மஞ்சூரியாவைத்தான் மஞ்சுகோ என்றழைக்கிறோம். மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுகின்ற முறையில் ரீஜண்டாயிருந்