பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உத்தமர்கள் 153


வேண்டிய நாட்களுக்கு முன்பு சாகடிக்கப்பட்டால், அவன் வாழ்வில் மிகுதியான நாட்கள் வேறு யாருடைய வாழ்விலும் ஒட்டிக்கொள்ளப் போவதில்லை. .


பல்லக்கு ஏறுபவனை உயர்ந்தவனென்றும், அவனையும் அவன் ஏறியிருக்கும் பல்லக்கையும் சுமந்து செல்பவனைத் தாழ்ந்தவனென்றும் நெடுநாட்களாக உலகம் கொண்டிருக் கின்ற எண்ணத்துக்கு நான் முற்றிலும் மாறுபட்டவன்.


நமது முன்னேர்களான பலாமிடஸ், அஜக்ஸ், டெலெ மோன் என்பவர்கள் எல்லாங்கூட அநியாயமான தீர்ப்பால் இறந்துவிட்டவர்கள்தான். சோலன், கைலோ, பிட்டேயியஸ், பியஸ், பெரியாண்டர், எபிமினிட்ஸ், க்ளிடேபாபூலஸ் என்ப வர்களெல்லாங்கூட, ‘உன்னை அறிவினையை நினை, சமயமறி, உலகில் அனேகர் தியோர்கள், உழைப்பினுல் ஆகாத தொன்று மில்லை, அமிதம் விலக்கு என்ற பொன் மொழிகளைச் சொல்விச் சொல்லி மாண்டு போனவர்கள்தான்.


இன்னும் சிறிது காலம் இவர்கள் கா த்துக் கொண்டிருக்கக் கூடாதா. வயதான நான் இயல்பாகவே மாண்டு விடுவ்ேன்) என் விடுதலைக்காகப் பக்குவமாகப் பேச எனக்கு நாவண்மை இல்லை. அதனலேயே நான் மரண தண்டனையடைந்தேன் என்பதும் உண்மையல்ல. நீங்கள் நினைப்பதுபோல் அழுதுக் கதறி புலம்பி உங்களை வேண்டிக்கொள்ளும் துணிவு எனக் கில்லை. சாவுக்கு அஞ்சி யாரும் ஒடக் கூடாது.


நமது ஆவி இவ்வுலகத்திவிருந்து மறு உலகத்திற்குச் செல்வதாகவும் இருக்கலாம். நினைவே இல்லாத-கனவி லும் கலையாத ஒருவித தூக்கநிலை அது என்றால், அதைவிட நன்மை எது என்பதை எண்ணிப்பாருங்கள். அந்த ஒர் இரவு. ஒரு பேரரசன்கூட அந்த ஓர் இரவுக்கு ஈடில்லை. இறந்தவர்கள் எல்லோரும் அங்கேதான் இருக்கிறார்கள் என்றால் அதைவிட இன்பம் வேறு ஏது? ஆகவே மனிதன் அந்த மறு உலகத்துக்கு போய்ச் சேரும்போது இந்த உலகத்தில் நீதிபதிகள் என்று சொல்லிக்கொள்பவர்களிடமிருந்து மீண்டுவிடுகிருன். அங்கே


0 . 108