பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உத்தமர்கள் I6I.

எங்களை மதித்தாய். அதிகமாக நேசித்தாய். எங்களுக்குக் கட்டுப்படவேண்டுமென்று உன் நாட்டு இளஞ்சிறார்கள் முதல் வயோதிகர்கள் வரைக்கும் நீயே புகட்டினாய். ஏன், உன்னைக் குற்றக்கூண்டிலே நிறுத்தி, உன் குற்றம் நிரூபிக்கப்பட்டபின் நீ விரும்பினால் தாயக உரிமையை இழந்து வேற்றுார் செல்லலாம் என்று நீதிமன்றம் உன்னைக் கேட்டபோது, ‘என் உயிருக்கு மேலாக, நான் பிறந்த தாயக மண்ணுக்கு மேலாக என்னை வளர்த்து ஆளாக்கிய சட்டங்களை மதிக்கிறேன். போற்றுகிறேன் என்று மார்தட்டிக் கூறிய நீயா கோழைபோல ஓடுகிறாய்? எங்களைக் குறைகூற உனக்கு உரிமை அளித்திருக்கிறோம். ஆனால் கீழ்ப்படியாமல் இருக்க உரிமையில்லை. எப்படி பெற்றாேர்கள் பிள்ளைகளைத் தண்டித்தால் பிள்ளைகளுக்குப் பெற்றாேரைத் திருப்பித் தண்டிக்க உரிமையில்லையோ, அதே போல நாங்கள் உனக்குத் தீமையே செய்திருந்தாலும் நீ திருப்பி எங்களுக்குத் தீமை செய்ய உரிமை இல்லை. இதை நீ நன்கு அறிந்தவனாயிற்றே. நீயா ஒடுகிறாய்?’ என்று கேட்டால் நான் என்ன பதில் சொல்வேன் கிரிடோ?

    கிரிடோ, எப்படியிருந்தாலும் இதை சகிக்க முடியாத அவமானம் என்று கருதுகிறேன். வெளிநாடு சென்றுவிட்டால் இந்த நிலை இருக்காது.
    சாக் : அங்கே சென்றதும் எதற்காக நாடுவிட்டு ஓடி வந்தாய் என்று கேட்டால் என்ன சொல்வது? அறம் தவறி விட்டது நம் தாயகத்தில் அதனால் வந்துவிட்டேன் என்று சொல்லவேண்டும். அறம் தவறிய நாட்டில் பிறந்தவனுடைய கடமை என்ன? தவறிய அறத்தை நேர்படுத்துவதுதானே? கோழைபோல ஓடிவிட்டால் அந்த கடமையை யார் செய்வது? தன் நாட்டு குடியுரிமையை இழந்து வேற்று நாடு சென்றால் அங்கே இரண்டாம் தர குடிமகனாகத்தானே வாழ முடியும்? தாய்நாட்டிலே வாழ்கிறவன் கடமையைச் செய்து உரிமையைப் பெறமுடியும். பிறநாட்டிலே வாழ்பவன் கடமையைச் செய்யலாம். உரிமையைப் பெறமுடியாது. அது நல்லதா? கிரீடோ நீ சொல்வதைப் போல் செய்தால், நானோ எனக்கு