பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

162 உலகைத் திருத்திய

வேண்டியவர்களோ இம்மையிலும் சரி, மறுமையிலும் சரி, சிறந்தவர்களாகவோ, நேர்மையுள்ளவர்களாகவோ, நியாயம் உள்ளவர்களாகவோ இருக்க முடியாது. இப்படியே நிரபராதியாக, துன்பம் அனுபவிப்பனாக, நீதியை நேசித்தவனாக, நேர்மையாளன் என்ற நற்பெயரோடு, அஞ்சா நெஞ்சன் என்ற கெளரவத்தோடு இறந்துவிடுறேன். யாரும் கவலைப் படாதீர்கள்.

    சாக்ரடீசின் ஆணித்தரமான விளக்கங்கள் கிரிடோ அவருடைய நண்பர்கள் மனதைக் கரைத்தன.
    ஒவ்வொரு நாளும் காலையில் சிறைக்கதவு திறக்கும் போது சாக்ரடீசின் நண்பர்கள் கூட்டமாகக் காத்திருந்து உள்ளே நுழைந்து அவருடன் பேசுவார்கள். தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முதல் நாள் அவருடைய கால்களில் இடப்பட்டிருந்த தளைகள் அவிழ்க்கப்பட்டன. அவருடைய மனைவி சாந்திபே குழந்தையைக் கையில் எடுத்துவைத்துக் கொண்டு பக்கத்தில் உட்கார்ந்திருந்தாள். கூடியிருந்த நண்பர்களைப் பார்த்து, சகோதரர்களே! இன்றுதான் கடைசி முறையாக உமது நண்பரிடம் பேசப் போகிறீர்கள், என்று கதறினாள், சாக்ரடீஸ், கிரிடோவிடம் சொல்லி அவர் மனைவி சாந்திபேயையும் குழந்தையையும் வீட்டிற்கு அழைத்துப் போகச் சொன்னார்.
     சாக்ரடீஸ் உயிரைவிடத் துணிந்துவிட்டார் என்ற உண்மை, நண்பர்களை உலுக்கியது. “ஐயோ, உயிரைவிடத் தயாராய்விட்டீர்களே” என்று புலம்பினர். அதற்கு சாக்ரடீஸ், ஞானமடைந்தவன் ஒவ்வொருவனும் இந்த உடலைவிட்டுப் போகவே விரும்புவான். ஆனால், அவனே வலிய சாவைத் தேடிக்கொள்ள மாட்டான். அது தவறு, உடலானது கடவுள் நமக்குத் தந்த ஒரு சிறைச்சாலை. அதிலிருந்து நாமாகத் தப்பிப் போகக் கூடாது. அவரே விடுதலை செய்யவேண்டும். ஏனென்றால் நாம் அனைவரும் ஆண்டவனுடைய பாதுகாப்பிலிருக்கிறோம். நாம் அவருடைய