பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உத்தமர்கள் 169

எந்த கதிஜா அம்மையாரிடம் வேலைக்கு இருந்தாரோ அவரையே மணந்து கொண்டார். இவர் மிக நாணயமாக நடந்துக்கொண்ட காரணத்தால் அல் அமீன் என்ற பட்டமும் இவரையடைந்தது. கதீஜா அம்மையார் ஒரு விதவை. வயது நாற்பது இவருடைய நாணயத்தையும் தோற்றத்தையும் கண்டு இருபத்தி ஐந்தே வயதான இவரைத் திருமணம் செய்துக்கொண்டார். ஒரு நாள் தொழுகைக்குப் போய் பத்திரமாக வீடு திரும்புவது என்பது உயிருக்கு ஆபத்தான வேலை. தெருவில் போய்க்கொண்டிருக்கும்போது இமதா பென்சைனா என்ற பெண் குப்பையெல்லாம் சேர்த்து இவர்தலை மேல் கொட்டுவாள். இரண்டு நாட்களாக இது நடக்கவில்லை. எங்கே அந்தப் பெண் என்று கேட்டார். உடல் நலமில்லை அவளுக்கு என்றனர். உடனே அவள் வீடு தேடிப்போய் அவளை நலம் விசாரித்து வந்தார். கதீஜா அம்மையாரை திருமணம் செய்து கொண்டபின் காபாவை புதுப்பிக்க எண்ணினார். அதிலும் ஒரு சிக்கல், அதாவது அதற்கு முன் கொண்டுபோக வேண்டிய கல்லை யார் கொண்டுபோவது என்பதில் குரைஷிகளுக்கும் பணி வகுப்பாருக்கும் போட்டி. அந்த காபாவை புதுப்பிக்க கல்லே முதலில் யார் எடுத்து வைப்பது என்ற போட்டியில் அந்த கருப்புக் கல்லை ஒரு துப்பட்டியில் போட்டு நான்கு பேரையும் நான்கு மூலையிலும் பிடித்துக்கொண்டு போகும்படிச்செய்து சண்டையைத் தீர்த்து வைத்தார்; இப்படிப் பல.

     இஸ்லாத்தை முதலில் தழுவியது இவரது மனைவி கதீஜா அம்மையார். பிறகு மெல்ல மெல்ல நாற்பது பேர்கள் தழுவினார்கள். எதிர்ப்பு குறைந்தபாடில்லை. ‘மோட்சம்’ எங்கே இருக்கிறது என்று கேட்டதற்கு உன் தாயின் காலடியில் என்றார். 
    நாம் இறந்த பிறகு என்ன ஆவோம். நான் இறந்த பிறகோ நீங்கள் இறந்த பிறகோ என்னஆவோம் என்று தெரியாது. இந்த வாழ்க்கையைப் பற்றி என்ன நினைக்கிறீர் என்று கேட்டதற்கு, குதிரைச் சவாரி செய்கின்ற ஒருவன் கொஞ்ச நேரம் மரத்தின் நிழலில் இளைப்பாறுவதைப் போன்றதுதான் இந்த வாழ்க்கை என்றார்.
   பூ. 102 உ. - 11