பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உத்தமர்கள் 181

அளவோடு நின்றுவிடுகிரு.ர்கள். அந்த ஜபமாலையை அவர்கள் கையில் கொடுத்தவன் யார், என்று கேட்கிரு.ர்கள் சிலர். ஆண்டவன் கொடுத்தான் என்கிரு.ர்கள் பக்திமான்கள். அந்த ஆண்டவனின் கடமையென்ன? என்று கேட்கிறார்கள் சில சிந்தனையாளர்கள். ஆண்டவனே நம்மையெல்லாம் படைத் திருக்கும்போது அவனையே இந்த கேள்வி கேட்கலாமா என்று நினைக்கிறார்கள் சில சக்தேகப் பிறவிகள். ஆண்டவனே நம்மைப் படைத்திருந்தால் ஆண்டவன் இப்படி மனித சமூகத்தை ஏற்றத் தாழ்வாக நடத்த முடியாதே, கூடாதே ஆக இப்படிப்பட்ட ஒரவஞ்சனேயுள்ளவன் ஆண்டவனுக இருக்க முடியாது. ஆகையால் ஆண்டவனை யாரோ படைத் தார்கள், என்ற விடை வருகிறது. ஒன்று உண்மையான ஆண்டவகை இருந்து, அவன் படைத்த குழந்தைகளாக நாம் இருப்போமால்ை, பல குழந்தைகளை ஈன்ற தாய் தந்தைய ருக்கும் இருக்கும் கருணைகூட ஆண்டவனுக்கு இல்லையே ஏன்? என்று கேட்கிறபோதுதான் ஐயோ நாத்திகம் கிளம்பி விட்டதே ஒடுக்குங்கள் மாமன்னர்களே, என்று மடாலயத்தில் அபாயச் சங்கு ஊதப்படுகிறது. ஒரு மனிதன் தன் உரிமையை கேட்கும்போது அவனை நாத்திகன் என்ற ஒரே சொல்லால் அடக்கிவிட முடியுமென்றால், ஒடுக்கப்பட்டவன் ‘நாத்திகம் வாழ்க’ என்று சொல்லாமல், ஒங்கார பிரணவ மந்திரமா சொல்லிக் கொண்டிருப்பான். கடவுள் என்று ஒன்றிருந்து அது எல்லாரையும் ஒரு சமமாக பாவித்து நடத்தாதபோது அதன் மேல் வெறுப்பு வராமல் என்ன செய்யும்.

அரசனைக் கடவுள் அவதாரம். இரண்டாம் கடவுள் என்று மதவாதிகள் சொல்வதற்கு என்ன காரணம் என்றும் கடவுளைக் காட்டமுடியாது, யாராவது கடவுளைக் காட்டு என்றால் என்ன செய்வது, ஆகையாலே அரசனேக் காட்டி, இவர்தான் கடவுள் அவதாரம், இரண்டாம் கடவுள் என்று சொல்லிவிடலாம் அல்லவா? அதளுல் கடவுள் என்ற சொல்லே மதம் என்ற பேதமையோடு சேர்ந்ததாகும். ஆகையால்தான் மார்க்ஸ் மதம் அபினியைப் போன்றது என்றான், -