பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 உலகைத் திருத்திய

மனைவி தெரிந்தவர்களிடம் மூன்று பவுன் கடன் வாங்கியிருக் கிருள். பால் வாங்கக் காசில்லாமல் தானே மார்பு வலியையும் முதுகு வலியையும் தாங்கிக்கொண்டு பால் கொடுத்திருச் கிருள் குழந்தைகளுக்கு ஜென்னி. என்றாலும் இவ்வளவு வறுமையிலும் கணவனைப் போற்றவே செய்தாள்.

1847ல் லண்டனில் நடந்த மாநாட்டில் மார்க்சும் ஏஞ்செல் சும் கலந்துகொண்டனர். ஏஞ்செல்ஸ் தயாரித்த அறிக்கை அவ்வளவு சரியாயில்லை என்று, ஒரு அறிக்கையை மார்கஸ் தயாரித்தான். அதுதான் கம்யூனிஸ்ட் மானிஃபெஸ்டோ (Communist manifesto) arcirui, g)#3 9 plisos espcirp. பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன.

மக்கள் சமூகத்தின் வரலாறு இது. சமூகம் போராட்ட மாகவே இருக்கிறதென்றும், ஒருவரையொருவர் அடக்கியாள் வதற்காகவே இருக்கிறதென்றும், இதன் மூலம் தற்காலத்து முதலாளி, தொழிலாளர் கூட்டம் எப்படி வளர்ச்சியடைந்தது என்பதையும் கட்டிக் காட்டுகிறது. இதல்ை பழையகாலத்தில் தொழில்கள் எல்லாம் நசுக்கப்பட்டுப் போகின்றன. புதிய தொழிகள் தோன்றி பழைய தொழில்களை அப்புறப்படுத்தி விடுகின்றன. இந்தப் புதிய தொழில்களே புகுத்துவதாலேயே அந்தந்த நாகரிக நாடுகளும் இருப்பதா இறப்பதா என்ற கேள்வி பிறக்கிறது. இந்தப் புதிய தொழில்கள் அந்தந்த நாட்டு மூலப்பொருள்களை பயன்படுவதில்லை. வெகுதூரத்தி விருந்து வரவழைத்துப் பயன்படுத்துகின்றன. அப்படியே உற்பத்தியான பொருள் உள்நாட்டிலேயே செலவாவதில்லை, தூர நாடுகளுக்குச் செல்கின்றன. இதஞல் ஒரு நாடு, மற்ற நாடுகளை நம்பி வாழவேண்டியிருக்கின்றது. இந்த உற்பத்தி முறையில் காட்டுமிராண்டி நிலையிலிருந்த மக்கள் நாகரிக மடைகிறார்கள். நகரம் சிறப்படைகிறது. கிராம நாகரிகம் நாளாவட்டத்தில் ஒடுங்கிவிடுகிறது. உற்பத்திப் பொருள்கள், சாதனங்கள் எல்லாம் ஒருசிலர் கையில் சேர்ந்து விடுகின்றன. அவர்கள் அவற்றைத் தங்கள் சொந்த நலத்திற்காகப் பயன் படுத்திக் கொள்கிரு.ர்கள். இதல்ை அதிகப் பொருள்கள்