பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 கரிபால்டி

1807ம் ஆண்டு ஜுலைத் திங்கள் 4ம்நாள், நைஸ் என்னு மிடத்தில், இத்தாலிய தாய் தந்தையருக்குக்குத் தனையணுகப் பிறந்தார் கரிபால்டி. அப்பொழுது இத்தாலி பிரான்சு நாட்டின் அரவணைப்பில் இருந்து வந்தது. கரிபால்டி. ஏழு வயது சிறுவகை இருந்தபொழுது, இத்தாலி அந்நியர்களால் பல்வேறு துண்டங்களாக்கப்பட்டு, ஆளப்பட்டு வந்தது. போப்பும், அவரது மத குருக்களும் மக்களை அறியாமை என்னும் இருளில் மூழ்கடித்திருந்தார்கள். ஆச்சிபீடத்தில் அமர்ந்து ஆட்சி செலுத்தி வந்த மதகுருமார்களுக்கு விரும்பத் தகாத செயல்களில் ஈடுபட்டோரையும், தன்னுரிமை வேண்டி துணிந்து பேச முயல்வோரையும் கண்காணிப்பதற்கென இரகசியப் படை, தன்னுடைய ஈனச்செயலே ஜனநாயகத்திற் கெதிரான சதிவேலையில் ஈடுபடுத்திக் கொண்டிருந்தது.

கரிபால்டியின் தாய் தந்தையர் கடலோரத்தில்,வாழ்க்கை யின் வரவுக்கும் செலவிற்கும் இடையே உழன்று, வாழ்ந்து வந்தனர். கரிபால்டியோ பள்ளியை மறந்து, கடகைப் பெற்ற துப்பாக்கியுடன் மலைகளில் வேட்டையாடுவதும், கடற்கரையில் நங்கூரமிட்டுள்ள கப்பல் மாலுமிகளுடன் வார்த்தையாடுவதுமாகக் காலங்கழித்துவந்தான்.