பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உத்தமர்கள் 199

பிறகு தென் அமெரிக்காவை அடைந்தபோது, போர்த்து கீசிய ஆதிக்கத்தை எதிர்த்து, ரியோ கிராண்ட்டோ சுல் என்ற மாநிலம் கிளர்ச்சியில் ஈடுபட்டு, தன்னை ஒரு குடியரசு நாடாகப் பறைசாற்றியது. சில இதாலியர்கள் விலங்கிடப்பட்டு இழுத்துச் செல்வதைக் கண்ட கரிபால்டி, தானும் அந்தப் போரில் பங்கேற்று, அம்மாநிலத்தின் சுதந்திரத்திற்குப் பாடு பட்டான். பிரேசில் நாட்டின் கடற்கடைப் பகுதியில் கரிபால்டி யின் பெயர் ஒருவித திகில் உண்டாக்கியது. ஒரு முறை காலேகுவே கவர்னர் இவனைக் கைது செய்து, இரண்டு மணி நேரம் கைகளைக் கட்டி சிறையில் தொங்கவிட்டு சித்திரவதை செய்ததை விவரித்துக் கூற இயலாது என்று கரிபால்டியே கூறுகிருன்.

பிறகு ரியோ கிராண்ட் இராணுவத்திலிருந்து விலகி, உருகுவே தலைநகரான மாண்ட் விடியோ என்னும் நகரை அடைந்தான். இந்த மாண்ட் விடியோவில் நாட்டின் விடுதலைக் காக நாடு கடத்தப்பட்ட இத்தாலியர்களே அதிகம். இவர் களைக்கொண்டபடை ஒன்றைத் திரட்டினன். அக் கப்பற்படை யின் கொடி கறுப்பு நிறமுடையது. கொடியின் மத்தியில் எரிமலை இருந்தது. இது இதாலி துயரத்தில் ஆழ்ந்திருப்பதாக வும், அதன் உள்ளத்தில் புனிதத் தீ எரிந்துகொண்டிருப்பதாக வும் விளக்குவதாக அமைந்தது.

அக் கப்பற் படையினரின் சீருடை சிகப்பு நிறைமுடையது. உலகத்திலுள்ள எல்லா தங்கத்தையும் என்னிடம் கொடுத் தாலும், இந்த இதாலிய சுதந்திரப்படையை நான் அவர் களுக்கு அளிக்கமாட்டேன் என்று கரிபால்டி பெருமையோடு கூறிக்கொள்கிருன்.

இப்படை வெற்றிக்கு மேல் வெற்றியடைந்து, அதன் புகழ் ஐரோப்பாவிலும், இதாலிக்கும் பரவியது. இத்தாலியில் உள்ள நாட்டுப் பற்றுகொண்டோர் கரிபால்டியின் சேவை யைப் பெரிதும் வேண்டினர்.

பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கரிபால்டி தன் நாட்டை இழந்து, அந்நிய நிலங்களில் அலேந்து திரிவதற்குக்