பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 உலகைத் திருத்திய

சாதுரியமான போர் நடவடிக்கைகள், எதிரியைத் திக்குமுக் காட வைத்தன. எதிரிகளின் ஆணவத்தைப் பாருங்கள்: கரிபால்டி சரண் அடைந்தால் கரிபால்டிக்கு இலவசமாக அமெரிக்கா செல்ல வசதி செய்வதாக செய்தி அனுப்பினர்கள். அச் செய்திக் கடிதம் கரிபால்டியால் கிழித் தெரியப்பட்டது. என் சொந்த உயிரைப் பொருத்தவரையில் நான் யாருடனும் ஒப்பந்தம் செய்துகொள்வதற்கில்லை; என்னுடைய உடல், பொருள், ஆவி அனைத்தும் இத்தாலியைவிட்டு நகராது என்று கூறினன் கரிபால்டி.

பல சகோதர படையினரை ஆஸ்டியரிடம் சரண் அடையச் செய்துவிட்டு, நன்றியுள்ள 200 படையினருடன் வெனிஸ் நகரை நோக்கிச் சென்றான். அவர்களுள் 162 பேர் எதிரிகளால் மூழ்கடிக்கப்பட்டனர். கரிபால்டி தன் மனைவியைக் கையில் ஏந்திவனவனாய் கரை சேர்ந்தான். ஆஸ்டிரியர்கள் தொடர்ந்து இவர்களே எதிர்த்தார்கள். எதிரியின் படைத்தலைவன் கூறிய தாவது: “தோண்டுங்கள் ஒன்பது சவக்குழிகள்; அடக்கம் செய்யுங்கள் இவர்களை’ என்று கூறி சுட்டுப்பொசுக்கினன். கரிபால்டி தன் மனைவியுடன் தப்பி, ஒரு விவசாயின் கருணை பிளுல் அவன் வீட்டில் மறைந்துகெண்டான். சேற்றைத் தவிர வேருென்றுமில்லாத அப்பிரதேசத்தில் தண்ணீர், தண்ணீர் என்று கூறிக்கொண்டே, கரிபால்டியின் மனைவி, அவன் மார்பில் சாய்ந்து உயிர் நீத்தாள். அங்கு கூடியிருந்த, விவசாயப் பெரு மக்கள், இவன் பேசுவதைப் பார்த்தால் கரிபால்டியைப் போலல்லவா தோன்றுகிருன் என்றனர். தன் மனைவியை முழுமையாக அடக்கம் செய்வதையும் பார்க்க இயலாத நிலை. எதிரிகள் கண்டுவிடுவார்ளோ, அல்லது குற்றமில்லா இவ் விவசாயிகள் தனக்கு உதவி செய்ததற்காக எதிரிகளால் தீங் கிழைக்கப்படுவார்களோ என்றஞ்சி அவ்விடத்தை விட்டு நகர்ந்தான். -

பல்வேறு மாறுவேடங்களில் கரிபால்டியும், அவர் நண்பர் விக்கியரோவும், அநேகமாக நாற்பது நாட்கள் அகலந்த திரிந்து