பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 உலகைத் திருத்திய

`மணியளவில் தன்னுடைய வாளே, அரசன் விக்டர் இம்மானு வலின் பிரதிநிதி பர்சனேவிடம் ஒப்படைத்தான். கரிபால்டி யின் பேருதவியால் விக்டர் இம்மானுவல் ஒருங்கிணைந்த இதாலியின் பேரரசனன்.

கவூரின் துற்போதனையால், கரிபால்டி தன் நாட்டிற்காகக் செய்த பேருதவியையும் மறந்து இம்மானுவல் ஒரு நன்றியும், தெரிவிக்காமல், தான் அங்கு அமைதி நிலைநாட்டச் செல்வ தாகக் கூறினன்.

இம்மானுவல் கரிபால்டியை மட்டும் வரவேற்றான். கரிபால்டியின் படையை வெறுத்தான். இதைக் கேட்ட கரிபால்டியின் படையினர் பொருமி எழுந்தனர். புரட்சி செய்யவும் ஆயத்தமாயினர். “பொருத்திருங்கள்: நான் உங்கள் நன்மைக்கே பாடுபடுவேன், என்றான் கரிபால்டி. கடைசியில் அரசன் நிலையை அறிந்து, கரிபால்டியை அவனது படையுடன் நேப்பிள்ஸ் நகரை நோக்கிச் செல்லும்படி ஆன யிட்டான். அந்நகர மக்கள் பெரும் வரவேற்பு அளித்தனர்.

நாட்டிற்காகச் செய்த நற்பணிக்காக நாடு தனக்களித்த கடாலாபியி இளவரசன் என்ற பட்டத்தையும், 5,00,000 பிராங்குகள் கொண்ட பென்ஷன் உதவியையும் உதறித் தள்ளிஞன். அவன் வேண்டியதெல்லாம் தன்னுடன் போராடிய 1000 வீரர்கள் கொண்ட படை ஏழ்மையில் உழலக் கூடாது; அவர்களை இந்நாடு மறக்கக்கூடாது.

அவன் அவர்களைவிட்டுப் பிரியும்போது, அப்போர்வீரர்கள் கண் கலங்கினர்; கதறினர்; இவ்வளவு குறுகிய காலத்தில், அளவிற் பெரிய காரியத்தை சாதித்துவிட்டோம் என்று அவர் களுக்கு மறுமொழி கூறினன்.

தன்னுடைய இரு கண்களும், விழித்திருக்க, தன்னுடைய வீட்டு சன்னல்கள் திறந்திருக்க, அக்கண்கள் பறந்த கடலை உற்று நோக்கியவாறு, தன்னுடைய எழுபத்தி ஐந்தாவது வயதில் இறந்துபட்டான். தனிப்பட்ட பெறும் நோக்கத் திற்காக எவனொருவனும் கரிபால்டியைப் போல் தன்னுடைய வாழ்நாளை வீணடித்திருக்கமாட்டான்,