பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மதங்கள்

37

அற்றுவிடுகிறது. நாமரூபம் அற்றால் ஆறு குணங்கள் அழிகின்றன. ஆறு குண அழிவினால் தொடர்பு உணர்ச்சி அகல்கிறது. தொடர்புணர்ச்சி அகன்றால் புலனுணர்ச்சி மறைகிறது. புலனுணர்ச்சி மறைந்தால் அவா என்னும் தாகம் எழுவதில்லை. தாகமற்ற நிலையில் பற்று விட்டுப் போகிறது. பற்று விட்டதும் ஜீவ இருப்பு மறைகிறது. ஜீவிதம் ஒழிந்தால் பிறப்பு இல்லாமல் போகிறது. பிறப்பு இல்லையென்றால் அதனால் வரும் வயது, மூப்பு, இறப்பு, துக்கம், ஏமாற்றம், ஏக்கம் யாவும் தோன்றுவதில்லை. இந்தத் தொடர்ந்த காரணத்துவத்தில் மக்கள் அவதியுறுகிறார்கள்.

செயலில், சொல்லில், நினைப்பில் நல்லதைப் பயிற்றுவிப்பதே துறவியின் நிலை. புத்தமதத்தைப் பின்பற்றுவோர் கொள்ளவேண்டிய நான்கு விரதங்கள்: 1. கொல்லாமை விரதம் 2. தானாக வருவதைத் தவிர மற்றவைகளைப் பெற ஆசை வைக்காதிருத்தல் 3. தவறான காமச் செயலைச் செய்யாதிருத்தல் 4. பொய்யாமை க. மதி மயக்கும் போதை வஸ்துக்களை அருந்தாமை.

பரத்வாஜர் என்ற விவசாயி ஒரு சமயம் புத்தரைப் பார்த்து, “இப்படி ஒரு உழைப்பில்லாத சோம்பேறியாக இராமல், எங்களைப் போல உழுது பயிரிட்டு உழைத்து வாழ்வதுதான் மேல்” என்றார். அதற்கு புத்தர் மறுமொழியாக,

“நானும் ஒரு விவசாயிதான். நம்பிக்கைதான் என் விதை. என் உழைப்பின் வேதனைதான் மழை. அறிவுதான் உழுகின்ற ஏர், வெட்கம் ஏரின் நுகத்தடி, மனம்-நுகத்தடியை இணக்கும் வார்ப்பூட்டு, சிந்தனையே தார்க்கோல் சாட்டைக் கழி, உடலில் செயலில் சிந்தனையில் வேலி போட்டிருக்கிறேன். உணவில் கட்டுப்பாடு, உண்மையினால் உணவைப் பக்குவப் படுத்துகிறேன். சாந்தமே என் கடைத்தோற்றம். ஏரில் பூட்டிய எருதுகளை என் சக்தியே ஆள்கிறது. அவை இணையில்லாத நிர்வாண நிலைக்கு என்னை அழைத்துச் செல்கின்றன. மீண்டும் திரும்பமுடியாத துன்பமற்ற இடத்திற்கு இட்டுச் செல்கின்