பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. சீக்கிய மதம்

கி. பி. 15ம் நூற்றாண்டில் அறிவியல், அரசியல் துறை களில் சுறுசுறுப்பு ஏற்பட்டு இந்தியா,ஐரோப்பா கண்டங்களில் உள்ள மக்கள், அறியாமை அயர்ச்சியை உதறித் தள்ளிவிட்டு ஆன்மீக மெய்ஞான விழிப்புணர்ச்சியுடன் விளங்கினர். ஞானவழி நூல்கள், வேதங்கள் முதலானவை, மதகுருமார் களுக்கு ஏகபோகமாக்கப் பட்டிருந்ததால், பாமர மக்கள் மெய் ஞான விளக்கமில்லாமல் மூடக் கருத்துக்களில் மூழ்கிக் கிடந் தனர். இந்தக் காலத்தில்தான் ஐரோப்பாவில் மார்டின் லூதர், கால்பின் போன்ற சீர்திருத்தவாதிகள் தோன்றி மதச் சடங்கு சம்பிரதாயங்கள் என்ற போர்வையில் நடந்த அநீதி களைத் தகர்க்க முற்பட்டனர்.

குருநானக் தோன்றும் வரையில், இங்குள்ள மக்கள் தாங்கள் எல்லாம் அறிந்தவர்கள் என்ற தவருண எண்ணத்தில் இருந்தனர். அற்புதங்களும், மாயவித்தைகளும், வசியம், மாந்திரிகம் என்பனவும் அதிகரித்து மக்களை ஏமாற்றி வந்தன. ஒரு கடவுளிலிருந்து பலவற்றை உருவாக்கி விட்டார்கள். வழிபாடுகள் பலவாகப் பிரிந்து நிலம், நீர், நெருப்பு, சூரியன், ஆகாயம், காற்று என்று பலவற்றையும் வணங்கினர்கள். மனிதர்களில் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற கற்பனை உதித் தது. இந்துக்களில் ஜாதிப் பிரிவினைகள் பெருகின. முகமதி யர்களும் பல பிரிவினராகி தங்கள் வேதக் கருத்துக்களை மறந்துவிட்டனர்.