பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மதங்கள்

41

இன்றியமையாதது என்பது அவரது கோட்பாடு. குருவே தெய்வமாக மதிக்கப்படுகிறார். குரு நானக் கி.பி. 1595ல் இயற்கை எய்தினார்.

குருநானக்கின் வாழ்க்கை வரலாற்று விவரங்களை கி.பி. 1588ல் ஒரு சீக்கியர் எழுதிய ‘ஜன்மசகி’ என்ற நூலில் காண முடிகிறது. குருநானக்குக்குப் பிறகு அங்கதர், குருஅமர்தாஸ், குருராம்தாஸ், குருஅர்ஜுன், குருஹரிகோவிந்த், குருஹரி ராய், குருஹரிகிருஷ்ணன், குருதேஜ்பகதூர் கடைசியாக குருகோவிந்த்சிங் என்ற பத்து குருமார்கள் இம் மதக் குருக்களாக மதிக்கப்படுகிறார்கள்.

மனிதர்களில் ஜாதிமத பேதமில்லாமல் இம்மதம் ஏற்றுக்கொள்கிறது. கடவுள் பெயரை மந்திரமாகச் சொல்லப்படுகிறது. குருமார்கள் வாழ்க்கையும் போதனைகளும் பக்திப் பாடல்களாக உலவுகின்றன. உருவ வழிபாடு, கபடவேடம், மந்திரம், மாயம் யாவும் இவர்களுக்கு உடன்பாடல்ல. இந்துக்கள்-முஸ்லிம்கள் இரு சாராரும் இம்மதத்தில் சேர்ந்தனர்.

இம்மதத்தில் சேருகிறவர்கள் ஞானஸ்நானம் என்ற புனித நீராட்டுக்குப் பிறகு, ஐந்து வழக்கங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். 1. முடிவெட்டாமல் இருத்தல், 2. கச்சம் உடுத்தல், 3. இரும்பு வளையம் அணிதல் 4. குத்துவாள் தரித்தல் 5. சிறிய தலைவாரும் சீப்பு சூடிக்கொள்ளல் ஆகியவை.

சீக்கியர்கள் அதிகாலை மூன்று மணிக்கு எழவேண்டும். நீராடிய பின் இறைவனின் பெயரை தியானம் செய்யவேண்டும். குருமார்கள் புனைந்த பக்திப்பாடல்களைப் பாடவேண்டும். குருவைத் தெய்வமாக மதிக்கும் இவர்களுக்கு குரு சகலமும் ஆனவர். குருநானக் புனைந்த ‘ஜாப்ஜி’ என்ற பக்திப்பாடல்களின் கோர்வைதான் சீக்கியர்களின் கீதம்.

தத்துவம்: கடவுள் ஒன்றே அழிவில்லாதது. மனிதர்கள் தங்கள் செய்கைகளுக்கேற்ப பலன் அடைகிறார்கள். கடவுள்

பூ-102, உ.-3