பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மதங்கள்

51

யும்” என்று உபதேசித்தார். பழைய ஏற்பாட்டுக் கருத்துக்களையும் இவருடைய கொள்கைகளையும் ஒன்றாக்க முனைந்த போது, ‘புதிய துணியும் பழைய கந்தலையும் சேர்த்து தைக்க எண்ணாதீர்கள். முழுத்துணியும் வீணாகும்’ என்று மறுத்தார். கடவுளை நம்பிக்கொண்டிருங்கள் என்று சொன்ன இயேசு, ‘எதற்கெடுத்தாலும் சோம்பேறியாக கடவுள் நம்பிக்கையே சோறுபோடும் என்று இருக்காதீர்கள்’ என்கிறார். (ஜேம்ஸ் 14-22) “அதனால் என்ன லாபம்? சகோதரனே அந்த நம்பிக்கை அவனைக் காப்பாற்றுமா? உன் சகோதரனோ, சகோதரியோ உடையின்றி நிர்வாணமாகவும் உணவின்றி பட்டினியோடும் இருக்கக்கண்டு, நீ தேவனின் மீது நம்பிக்கை வை என்று போதிப்பதால் அவர்கள் உடல் மறைக்கப்பட்டுவிடுமா? வயிறு நிரம்புமா? அவர்களுக்காக நீ வேலை செய்ய வேண்டமா? உதவுவது அவசியமல்லவா; உழைப்பே கூலி கொடுக்கும்” என்று கூறுகிறார்.

மனித வாழ்க்கைக்குத் தேவையான அவருடைய உபதேசங்கள் இன்று உலகில் பெரும்பகுதியில் பரவி வாழ்கின்றன.

“உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்” (மத். 6-21)

“நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல் உன் சகோதரன் கண்ணில் இருக்கிற துரும்பை பார்க்கிறதென்ன?” (மத்.7-3)

“கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும். தேடுங்கள், அப்பொழுது கண்டு அடைவீர்கள், தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்.” (மத். 7-7)

“தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்” (மத். 23-12)

“மனிதர்களுக்குச் செய்யும் சேவையே பரமபிதாவுக்குச் செய்யும் தொண்டு.”