பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

உலக

இருந்ததால், அப்படியே செய்ய நினைத்த பிலாத்தே இயேசுவைப் பற்றி கேட்டார். முன்பே அன்னாஸ் போன்ற சதிகாரர்களால் தூண்டிவிடப்பட்ட கூட்டம் ‘அவனைக் கொலை செய், கொலை செய், என்று கூச்சலிட்டனர். (மத்தேயு 27-24) கலகம் அதிகமானதே அல்லாமல் தன் பிரயத்தனத்தினாலே பிரயோ ஜனமில்லை என்று பிலாத்து கண்டு, தண்ணீரை அள்ளி ஜனங்களுக்கு முன்பாகக் கைகளைக் கழுவி, ‘இந்த நீதிமானுடைய இரத்தப் பழிக்கு நான் குற்றமற்றவன். நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள், என்று சொல்லிப் போய்விட்டான்.

தண்டனை ஊர்ஜிதமாகியது என்று கண்ட சதிக்குழு, அவரது மேலாடைகளை அவிழ்த்து, செந்நிற அங்கியை அணிவித்தனர். கசைவாரினால் இயேசுவின் பொன்னுடம்பு இரத்தமயமாகியது. முள்ளினால் பின்னிய முடியை அவர் தலைமீது சூடி மகிழ்ந்தனர் கொடுமையாளர்கள். அவருடைய அன்புக்குரியவர்கள் கண்ணீர் மல்கினர். அறிவு மழுங்கிய யூதர்கள் அவர் மீது எச்சிலைத் துப்பினர். (மத்.27-38) கபாஸ்தலம் என்று அர்த்தம் கொள்ளும் கொல்கொத்தா என்னுமிடத்திற்கு சிலுவையைச் சுமந்தவாறு இயேசு இழுத்துவரப்பட்டார். உலகின் இருளை போக்குவேன் என்று முழக்கமிட்ட அந்த அருள் ஜோதியின் உடல், மரச் சிலுவையிலே இருகைகளும் விரிய வைக்கப்பட்டு ஆணியால் அறையப்பட்டது. ஆத்மீக உலகம் அலறித் துடித்தது. ஆணவக்காரர்கள் ஆனந்தமடைந்தனர். மனிதனின் மன இருள் அகற்ற வந்த மனிதருள் மனிதர், மனிதனாலேயே தண்டிக்கப்பட்டார். அன்பு நிறைந்த உள்ளத்திலே ஆணி பாய்ந்தது. சுற்றி நின்று சிரிக்கின்ற கொடுமையாளர்களைக் கண்டபோதும் அவர் மனம் ஆத்திரப்படவில்லை. (லூக்கா “23.34) “கர்த்தரே, அவர்கள் அறியாமல் செய்யும் இக்குற்றத்திற்காக இவர்களை மன்னியுங்கள்” என்று வேண்டிக் கொண்டது அந்த அன்பு நெஞ்சம். சிலுவையின் பாதங்களைக் கண்ணீரால் கழுவியவாறு முடங்கிக்கிடக்கும் தன் அன்னை மேரியையும், சீடன் ஜானையும் ஒரு ஈனக்குரல் அழைத்தது. “ஜான்! உன் அன்னையைக் கவனித்துக்கொள். அம்மா! உன் மகனைப் பார்த்துக்கொள்”