பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மதங்கள்

57

ஒரு தனி நாடும், தனி மதமும், கடவுளும் உருவாக்கத் திட்ட மிட்டான் மோசஸ். அதன் விளைவாக மீண்டும் எகிப்தில் நுழைந்து, அங்குள்ள அடிமைகளைச் சந்தித்துப் புரட்சி செய்யுமாறு தூண்டினான். அதனால் ‘பரோக்கள் மனம் மேலும் கடுமையாகி அடிமைகளுக்கான தண்டனை மிகுதிப்பட்டது. பிறகு கொள்ளைநோய் வந்து பல அழிவுகளை எகிப்தில் உண்டாக்கிய சமயம், மோசஸ் யூதர்களை எகிப்தை விட்டு வெளியே அழைத்துச் சென்றான்.

யூதர்களுக்குப் புது ஆத்மீக பலத்தையும் ஒழுக்க நியதிகளையும் நிரந்தரமான வாழ்க்கையையும் அமைத்துத் தர வேண்டுமென்ற ஆசை மோசசின் மனதில் கொழுந்து விட்டெரிந்தது. இதற்காக சினாய் மலைக்குச் சென்று அங்கிருந்தபடி தன் மக்களுக்குப் பத்துக் கட்டளைகளைப் பிறப்பித்தான் அது தான் பிரபலமான ‘பத்துக் கட்டளைகள்’ என்பதாகும்.

1. நான்தான் தலைவன்-உங்களை எகிப்திலிருந்து அடிமைத் தளையை அகற்றி விடுதலை அளித்த கடவுள்.

2. எனக்கு முன்பு உங்களுக்குக் கடவுள் இல்லை. என்னத் தவிர வேறு கடவுள்களை வணங்கவோ, சேவை செய்யவோ சொர்க்கத்திலும், பூமியிலும், நீருக்கடியிலும் தேடினாலும் கிடையாது. எனது பத்துக் கட்டளைகளைப் போற்றவேண்டும்.

3. தலைவனின்-கடவுளின் பெயரை வீணுக்குப் பயன் படுத்தினால் அவனைக் கடவுள் மன்னிக்கமாட்டார்.

4. ஓய்வு நாளைப் புனிதமாகக் கொள்ளுங்கள். ஆறு நாட்கள் உங்கள் வேலையை, தொழிலை செய்யுங்கள். ஏழாவது நாள் கடவுள் சொர்க்கத்தையும், உலகையும், கடலையும் படைத்த களைப்புத் தீர ஓய்வெடுக்கும் நாள். அன்று ஓய்வெடுங்கள். கடவுள் ஆசீர்வதிப்பார்.

5. உங்கள் தந்தையை, தாயைக் கெளரவியுங்கள். கடவுள் உங்கள் ஆயுளை வளர்ப்பார்.

6. கொலையில் ஈடுபடாதீர்கள்.

பூ.102 உ.-4