பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

புரட்சி செய்த

கொண்டிருந்தார். ஆகவேதான் இந்தச் சகோதரர்கள் இருவரையும் பற்றி தந்தையார் இப்படிச் சொல்ல நேர்ந்தது. அவர் ஒரு வழக்கறிஞராக இருந்ததால், கொள்கைவாதிகளைக் காட்டிலும் காரியவாதிகளே சிறந்தவர்கள் என்று அவர் கொண்டிருந்த கொள்கையை, இந்த ஒரு மகன்களும் சேர்ந்து தவிடு பொடியாக்கினார்கள். நுண் கலையில் (Fine arts) கைதேர்ந்த நினான்டி எல்வென்கொல் என்பவர், வால்டேருக்கு நேர்த்தியாக எதிர்காலம் இருக்கிறதென்று உணர்ந்து, அவருக்குக் கல்வியும் போதித்து, சாகும்போது தனக்குத் தேவையான நூல்களை வாங்கிக்கொள்வதற்காக 2000 பிராங்குகளை வால்டேருக்கு எழுதி வைத்துவிட்டுப் போய்விட்டார்.

மதநம்பிக்கைகள் எங்கும் பரவியிருந்த காலம். சீமான்கள் தங்கள் குழந்தைகளுக்கு மதநம்பிக்கைக் குறையா வண்ணம் பார்த்துக்கொண்டனர். ஏனெனில் நாடாண்டவன் மன்னனானாலும், அவனையும் சேர்த்து ஆண்டது மதமல்லவா? அதுவும் பாரிஸ்-அதனைத் தலைநகரமாகக் கொண்ட பிரான்சுக்கும் இங்கிலாந்திற்கும் ஏராளமான வித்தியாசமுண்டு. மதசம்பந்தமாக எழும் சிறிய எதிர்ப்பைக்கூட சகித்துக்கொள்ள முடியாத நாடு பிரான்சு. அதேசமயம் ஒருவன் எவ்வளவுதான் மதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் காதாரக் கேட்டுச்சகித்துக்கொண்டு அவனை வரவேற்று உபசரிப்பது ஆங்கில நாட்டின் பண்பு. அதை ரூசோவைப் பற்றி எழுதும்போது விவரிப்போம். அவர் மதகுருமார்களிடம் பாடம் கேட்டு, தர்க்க வாதத்தைக் கற்றுக் கொண்டு அதே தர்க்க வாதத்தைக் கொண்டே எந்த மதகுருவும் தன் முன்னால் நிற்கமுடியாமல் புறமுதுகிட்டு ஓடச் செய்தார்.

வால்டேர் வாலிபப் பருவம் அடைந்தவுடன் “என்ன தொழில் செய்யப் போகிறாய்?” என்று கேட்ட தந்தையிடம் “இலக்கியத் தொழிலைச் செய்யப் போகிறேன்” என்று வால்டேர் கூறினார். இதைக் கேட்ட தந்தையின் கண்கள் சிவந்தன; ஆத்திரப்பட்டார். இருந்தாலும் வால்டேர் தன் முடிவை மாற்றிக் கொள்ளவில்லை சட்டத் தொழிலில் ஈடுபட்டார்