பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பேனா வீரர்கள்

87

மேல் ஏன் கோபப்பட வேண்டும்? இயல்பாகவே அமைந்து விட்ட அவனுடைய தீக்குணத்தால் அவன் அவ்வாறு பிறருக்குத் தீமை செய்வதாக வைத்துக்கொள்வோம். முட்புதர்களின் இயல்பு மனிதரைக் குத்துவதும் பிறாண்டுவதும்தான். அதைத் தவிர, பாவம், அதற்கு வேறு என்ன செய்யத் தெரியும்?

(......Certainly, in taking revenge, a man is but even with his enemy; but in passing it over, he is superior; for it is a prince’s part to pardon; and Solmon, i am sure, saith, ‘It is the glory of a man to pass by an offence’. That which is past is gone and irrevocable, and wise men have enough to do with things present and to come; therefore they do but trifle with themselves that labour in past matters. There is no man that doth a wrong for the wrong’s sake, but thereby to purchase himself profit, or pleasure, or honour, or the like; therefore why should I be angry with a man for loving himself better than me? And if any man should do wrong, merely out of ill-nature why, yet it is but like the thorn or briar which prick and scratch, because they can do no other...! OF REVENGE’)

நட்பு: ஒருவன் தன் உள்ளத்தைத் தன் நண்பனுக்கு வெளிப்படுத்தும்பொழுது, இன்பம் இருமடங்காக அதிகரிக்கிறது. துன்பம் பாதியாகி விடுகின்றது. ரசவாதிகளின் செயல் போன்ற ஒரு செயல் இங்கே நிகழ்கின்றது. ரசவாதிகளின் கல், மனித உடம்பில் எதிர்மறையான நிகழ்ச்சிகளைத் தூண்டி விட்டாலும் கூட, அந் நிகழ்ச்சிகள் உடம்பிற்கு நல்லதையே பயக்கின்றன. ரசவாதிகளின் உதவியையே வேண்டாது, அவர்களின் கல்லுக்குச் சமமான ஒன்றை இயற்கையாகவே நட்பின் சிறப்பில் நாம் காண்கிறோம்... ஒரு மனிதன் தன் மகனிடம் தந்தையைப் போன்றுதான் பேசமுடியும்; தன் மனைவியிடம் கணவனைப் போன்றுதான் பேசமுடியும். ஆனால் எதிரிகளிடம் நிபந்தனைக்ளுடன்தான் பேசமுடியும்.