பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

புரட்சி செய்த

நிறைய மூடினார். இதைச் செய்யும்போது அவருடைய கைகள் குளிர்ச்சியால் விறைத்துப்போயின. அந்தக் குளிர்ச்சி உடலிலே பரவியது. உடம்பு சக்தியிழந்தது. பக்கத்திலிருந்த நண்பர் அருண்டேல் பிரபுவின் (Earie Arundale) வீட்டிற்கு, அவர் கேட்டுக் கொண்டதன் பேரில் நண்பர்கள் அவரைக் கொண்டுபோய் கிடத்தினார்கள். அங்கே உயிர் துறந்தார்.

பிரான்ஸிஸ் பேகனின் பிறப்பு-வளர்ப்பு

1561-ம் ஆண்டு ஜனவரித் திங்கள் 22ம் தேதி பிரான்சிஸ் பேகன் லண்டன் நகரிலே பிறந்தார். இவரது தந்தையின் பெயர் சர் நிக்கோலாஸ் பேகன் (Sir Nicholos Bagon) மிகப் புகழும் செல்வாக்கும் பெற்றிருந்த நிக்கோலாஸ் பேகன் அரசாங்கத்திற்கு வெகு காலமாகச் சிறந்த சேவை செய்தவர். அரசாங்கத்தில் மிகப்பெரிய பதவிகளில் ஒன்றான முத்திராதிகாரப் பொறுப்பு (Lord keeper of the great Seal) ஏற்று இராணி எலிசபெத்தின் ஆட்சியிலே இருபதாண்டு காலம் அதை வகித்தார். செல்வமும் செல்வாக்கும் நிறைந்த குடும்பத்திலே பிறந்த பிரான்சிஸ் பேகனுக்கு அவர் அன்னையே ஆசிரியையாக அமர்ந்து, பிறகு அவர் கல்வியை வளர்க்கப் பாடுபட்டார். அன்னையின் பெயர் ஆன்கூக் (Lady Anne Cooke) அந்த அம்மையாரின் தந்தையார் ஆறாம் எட்வர்ட் மன்னருக்கே பிரதம ஆசிரியராக இருந்தவர். அக்காலத்தில் கிரேக்க மொழி கல்லாதவர்களைக் கற்றவர்கள் வரிசையிலே வைத்து எண்ணுவதில்லை. அந்த அம்மையாருக்கு கிரேக்க மொழியிலே நல்ல பயிற்சியும், கடித போக்குவரத்துக்கள் கிரேக்கமொழியிலே நடத்தவுமாக இருந்ததால் நல்லசெல்வாக்கிருந்தது. சிறுவனுக்கு பத்து வயது ஆவதற்குள்ளாகவே அவனுடைய மதிநுட்பத்தைக் கண்டு பல பெரியவர்கள் வியந்து பாராட்டியிருக்கிறார்கள். ஒருநாள் சில இளைஞர்களோடு செயிண்ட் ஜேம்ஸ் பீல்டு என்ற இடத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது எதிரிலிருந்த சுவற்றிலிருந்து எதிரொளி வருவதைக் கண்டு அங்கேயே நெடுநேரம் நின்று