பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96

புரட்சி செய்த

விஷயங்கள் எதிலும் அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வராது பொறுமையுடன் காத்திருந்து மேலும் தொடர்ந்து அலசிப் பார்க்கும் சுபாவமும் எனக்கிருந்தது. இடையறாது சிந்திப்பதிலே இணையற்ற இன்பம் காணும் மனப்பாங்கை நான் பெற்றிருந்தேன். எனது தப்பான கருத்துக்களையும் எவ்வித தயக்கமுமின்றி திருத்திக்கொள்வேன். என்‘சிந்தனைகளை இடம்மாறாது வரிசையாக்கிக் கோப்பதிலே எவ்வித சிரமத்தையும் பொருட்படுத்தமாட்டேன். வெறும் புதுமையின் மேல் பைத்தியமோ அல்லது பழைமையின் மேல் கண் மூடித்தனமான பற்றே எனக்குக் கிடையாது. ஏமாற்றல் என்பதை அடியோடு வெறுத்தேன். இக்காரணங்களால் மெய்மைக்கும் என்மனோ அமைப்புக்கும் இயல்பான தொடர்பு இருப்பதாக நான் கருதினேன்.”

“ஆனால் என்னுடைய பிறப்பும், வளர்ப்பும், என் கல்வியும் நான் விரும்பிய தத்துவத்திற்கு வழி காட்டாது, அரசியலுக்கு வழிகாட்டின. குழந்தை பருவத்திலிருந்தே என்னுடைய இயல்புக்கு அரசியல் வண்ணம் பூசப்பட்டது. இந்த நோக்கத்தினுடனேயே நான் அரசியலில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன்.”