பக்கம்:உலக அரங்கிலே உன்னத நிகழ்ச்சிகள்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

செய்வதை விட, தம்மைக் கண்டே. சிரிக்கச் செய்வது சுலபம் என்று அறிந்தார். அது முதற்கொண்டு, தமது மேற்கோளை மறந்து சட்டை பையால் துழாவுவது போல எப்போதும் நடிக்கத் தொடங்கினார். மேலும் ஒரு சமயம், மேற்கோளை வேண்டுமென்றே பிழைபடச் சொல்லுவார். இவற்றாலெல்லாம் சபையோர் ஓயாமல் சிரித்தார்கள்.

இவ்வாறு, அவ்வியாபாரி தமது சொந்தக் கவரவத்தைச் சற்றே விட்டுக் கொடுத்ததின் மூலம் மக்களின் அன்பைக் கவர்ந்த பிரசங்கியானார் ? அவரது ஏல வியாபாரமும் உலகப் பிரசித்தமானது!

அந்த வர்த்தகர் யார்?

ஸர் ஜோன் மில்டன்!

சித்திர விசித்திரம்!

டில்லி முழுவதும் அந்த மேல் நாட்டுச் சைத்ரீகனைப் பற்றித்தான் பேச்சாக இருந்தது. கிழவி ரோஷனாவுக்குத் தன் படம் ஒன்றை அவனிடம் எழுதி வாங்க வேண்டுமென்று ஆசை பிறந்தது; வெற்றி கிடைத்தது!

படத்தை மேலும், கீழும் திருப்பித் திருப்பிப் பாத்தாள்; ஒளியிழந்த அவளுடைய கண்களுக்குப் படம் ஒன்றும் தெளிவாகவே தெரியவில்லை. அந்த