பக்கம்:உலக அரங்கிலே உன்னத நிகழ்ச்சிகள்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

தாய்நாட்டுப் பாசமோ!

பாரிஸிலிருந்து ருஷ்யவீரர் யூரி ககாரினுக்கு வாரம் இருமுறை சிறுடப்பா பார்சல் வந்து கொண்டிருக்கிறது. அந்த டப்பாவில் ஆட்டுக்குட்டியின் புதிய இறைச்சி இதயப்பகுதி சுத்தமாக வைத்து அனுப்பப் படுகிறது.

ககாரினின் சிற்றுண்டிக்குத்தான் இந்த இறைச்சியா? --அல்ல! அவர் வளர்க்கும் 'விலார்க்வியர்' எனும் ஈரானியப் பூனைக்குத்தானாம் இது. ககாரினின் வெற்றிக்காக பாரிஸில் பூனை வளர்ப்புச் சங்கத்தாரினால் அளிக்கப் பட்ட பரிசு இப்பூனை. ஆனால் இதுவோ ருஷ்யா வந்ததும், ருஷ்ய உணவு எதையும் தொடமறுத்ததாம். உடனே மிகவும் சலுகை பெற்று பாரிஸ் இறைச்சிக்கு வழிவகை செய்தாராம். இப் போது அது மிகவும் சுறு சுறுப்பாகத் தன் நாட்டு மாமிசத்தைச் சுவைத்து வருகின்றதாம்!

"இறுதி வெற்றி நமக்கே." என்று பறைசாற்றி 'V' எனும் ஆங்கில எழுத்தை தமது இருவிரல்களாம் காட்டி, இறுதியில் இரண்டாம் உலகப் போரில் வெற்றி பெற்ற சரித்திர வீரர் சர் வின்ஸ்டன் சர்ச்சில்.

முப்பதுக்கு மேற்பட்ட நூல்களின் ஆசிரியர் இவர் தமது தேசத்தின் கௌரவ பிரஜையாக 1963ல் தேர்ந்தெடுத்தது. வெளிநாட்டார் ஒருவரை அமெரிக்கா கௌரவப் பிரஜையாக ஏற்றது அதுவே முதல் தடவையாகும்!