பக்கம்:உலக அரங்கிலே உன்னத நிகழ்ச்சிகள்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13

கல்யாணத்துக்கு போனஸ்!

ப்பான் நாட்டில், தொழில் வளர்ச்சி உச்ச நிலையை அடைந்திருப்பதால், தொழிலாளர்களை ஊக்குவிப்பதற்காகக் கல்யாணபோனஸ் கொடுக்கிறார்கள். ஒரு பெண்ணை ஒப்பு வைத்து விட்டு, இவ் விஷயத்தை முதலாளியிடம் சொன்னால் போதும். உடனே போனஸ் கிடைக்கும்....

இசைக் கருவிகள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் இந்தப் போனஸ் கொடுக்கப்படுகிறது. 500 பென் -- அதாவது ரூபாய் 7 -- போனஸ் தொகை!

ஒரு ப்ரிஸ்க்ரிப்ஷன்!

டாக்டர் லூதர் கோல்ட் என்பவர் குழந்தை வைத்தியத்தில் பெயர் பெற்றவர். மேலை நாடுகளில் வெகு பிரசித்தமானவர். சதை போடாமல், மெலிந்து நொஞ்சான்களாகவே காட்சியளிக்கும் சிசுக்களுக்கு ஒரு சரியான மருந்து வைத்திருந்தார் அவர்.

வைத்தியசாலையைச் சுற்றிப் பார்ப்பார். நோஞ்சலான பரிதாபத்துக்குகந்த குழந்தைகளை அவர் பார்க்க நேர்ந்தால், உடனே அந்தந்தப் பகுதி, நர்சுகளுக்கு அவர் கீழ்க் காணும் வைத்தியக் குறிப்பை எழுதி வைப்பது வழக்கம்.

"மூன்று மணிக்கொரு தடவை குழந்தைக்கு முத்தம் கொடுக்கவும்!" இதுதான் வைத்தியம்!

- -- --