பக்கம்:உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120

உலக அறிஞர்களின்


பெறுவது போலவே கொடுக்கவும் வெண்டும் சந்தோஷமாய், விரைவாய், தயக்கமின்றிக், கையைவிட்டுக் கிளம்பாத கொடையால் பயனில்லை.

-ஸெனீக்கா

பிறர்க்கு வழங்கியதை மறத்தல் பெருந்தன்மை பேசும்.

-காங்க்ரீவ்

ஈதலாகிய ஆடம்பரத்தை அறிய ஏழையாயிருத்தல் வேண்டும்.

-ஜார்ஜ் எலியட்

கையில் வைத்துக்கொண்டே இன்று போய் நாளைவா என்று கூறாதே.

-விவிலியம்

பெரிய கொடையேயாகிலும் அன்பின்றிக் கொடுத்தால் கொடையாகாமல் தேய்ந்து போகும்.

-ஷேக்ஸ்பியர்

★ ★ ★


47. மனத்திருப்தி

ரோஜாச் செடியில் முள் இருப்பதற்கு வருந்தாதே. முட்செடியில் மலர் இருப்பதற்கு மகிழ்வாய்.

-ஆவ்பரி

மனம் கொண்டது மாளிகை, நரகத்தைச் சொர்க்க மாக்குவதும் சொர்க்கத்தை நரகமாக்குவதும் அதுவே.

-மில்டன்

விருப்பத்திற்குக் குறைவாய்ப் பெறுபவன் தகுதிக்கு அதிகமாய்ப் பெறுவதாக அறியக் கடவன்.

-ஷோபனார்

உயர்ந்த சிலரோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்வதினும் தாழ்ந்த பலரோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்வதே நலம்.

-ஜாண்ஸன்