பக்கம்:உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

11



பாசத்தோடும், உயர்வான பண்போடும் நடந்தாலும் கூட. தவறு செய்தான் எனப்படும்போதும் ஆராய்வாயாக! ஏன் தெரியுமா? நெறி பிறழ்வது மனித இயல்பு தானே என்று சிந்தனை செய்!

ஆங்கிலப் பேரறிஞர் கார்லைல்; அவர் கி.பி.1795ஆம் ஆண்டு பிறந்து கி.பி.1881ல் மறைந்த புகழாளர். ஏறக்குறைய 86 ஆண்டுகள் வாழ்ந்து காட்டிய அறிவு வைரம் அவர் என்ன கூறுகிறார் அன்பு பற்றி.

கண்டிக்க அறியாதவன், தெரியாதவன், எப்படி கருணை காட்டுவான்? கண்டிப்பாக முடியவே முடியாது என்று வினா தொடுத்து விடையை விளக்கிய வித்தகர் அவர்!

ஒருவன் அன்பு செய்தும் கூட அவனால் அந்த அன்பை பெறமுடியாமல் இருப்பது துக்ககரமான ஒரு செயல்! ஆனால், ஒருவனால் அன்பு செய்ய இயலாதிருப்பது அதனினும் அதிகத் துக்கமானதாகும்.

இவ்வாறு கூறியவர் ஒரு நாடக ஆசிரியர். ஐரோப்பிய கண்டத்துள்ளே உள்ள பெல்ஜியம் என்ற நாட்டில் கி.பி.1852-ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் நாடகக் கலை திறமைக்காக நோபல் பரிசு பெற்றவர். இந்த அறிவாளர்க்கு அறிவாளியான இவருடைய பெயர் மாட்டர் லிங்க். இவர்தான் அன்பு பற்றிய தனது உணர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளவராவார்!

உலகப் புகழ் பெற்ற டால்ஸ்டாய் என்ற நாவலாசிரியரைப் பற்றி அதிகம் கூற வேண்டியது இல்லை அல்லவா? இவர் ருஷ்ய நாட்டிலே கி.பி.1828-ஆம் ஆண்டு பிறந்தார். கி.பி.