பக்கம்:உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/13

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

உலக அறிஞர்களின்


1910-ஆம் ஆண்டு புகழ் பெற்று மறைந்த மாபெரும் எழுத்துலக ஞானி இவர்தான். காந்தியடிகளாருக்கும் வழிகாட்டியாக விளங்கியவர். இவரது போரும் சமாதானமும் என்ற நாவல் உலகப் புகழ் பெற்ற பெருநூல்! இவர் என்ன கூறுகிறார் அன்பு என்ற ஞானம் பற்றி?

"யாருக்கு நாம் அன்பு செய்கிறோமோ, அவரை நேசிக்கிறோம். யாருக்குத் தீமை செய்கிறோமோ அவரை வெறுக்கிறோம்" என்று உணர்ச்சியின் பாவங்களை உருவகப்படுத்தி உரைத்துள்ளார்:

இவர் ஓர் ஆங்கில ஆசிரியர்; அறிவியல் துறை அறிஞர். கி.பி.1561-ஆம் ஆண்டு பிறந்து கி.பி.1626-இல் மறைந்தார்! ஏறக்குறைய 65 ஆண்டு காலம் வாழ்ந்த இந்த மாமனிதர் 'அன்பு' பற்றிக் கூறும்போது, மனிதருக்கும் பல்கள் சங்கமம் அல்ல; எந்த இடத்தில் அன்பு இல்லையோ, அந்த இடத்தில் கூடியுள்ள முகங்கள் எல்லாம் வெறும் படங்கள்தான்! அங்கே பேசப்படும் பேச்சொலிகள் வெறும் கிண்கிணி ஓசைகளே!, என்று கூறிய அவரது பொருள் எவ்வளவு இன்றைய கூட்டங்களுக்கு, அதுவும் அரசியல் கூட்டங்களுக்குப் பொருந்துகிறது பார்த்தீர்களா?

இதோ மறுபடியும் ஆங்கில மகாகவி பேசுவதைக் கேளுங்கள்: "பிறர் நலம் கண்டு மகிழமாட்டார்கள் யார்? பிறர் துன்பங்களைக் கண்டு மனம் வருந்தி இரங்கமாட்டார்கள்! யார்? அவர்கள்தான் அன்பிலார்! அவர்கள் எல்லாரும் இறந்து படுக" என்று சாபம் கொடுத்துவிட்டார் போப் என்ற இந்த ஆங்கிலப் பெருங்கவிஞன்!

★ ★ ★