பக்கம்:உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

137


கவிதை என்பது கருத்தின் இசையைப் பாஷையின் இசையில் தெரிவிப்பதாகும்.

-சாட்பீல்ட்

கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே யாவான்.

-இப்ஸன்

கவிதை வெற்றி பெறுவது அழுவதை மாற்றுவதிலும் மனத்திற்குத் திருப்தி அளிப்பதிலுமில்லை. அடைய முடியாததை அடைவதற்காக மறுபடியும் முயற்சி செய்யும்படி நம்மை எழுப்பி விடுவதிலேயே உண்டு.

-எமர்ஸன்

கண்ணுள்ளவன் கவிஞன்.

-இப்ஸன்

எனக்கு தேசத்துக்கு வேண்டிய பாடங்களைப் பாடும் பாக்கியம் கிடைத்தால் போதும் யார் வேண்டுமானாலும் சட்டங்கள் செய்யும் அதிகாரத்தை வகித்துக் கொள்ளட்டும்.

-பிளச்சர்

உயர்ந்த கவிதையை சிருஷ்டிக்க விரும்புபவன் தன் வாழ்வு முழுவதையுமே ஒரு உன்னதக் கவிதையாக ஆக்கிக்கொள்ளக் கடவன்.

-மில்டன்

★ ★ ★


55. புத்தகங்கள்

ஒரு பொழுது கூடத் திறக்காவிடினும் சரி, ஒரு மொழிகூடப் படிக்காவிடினும் சரி, நூல்களைப் போல வீட்டை அலங்கரிக்கும் அழகான பொருள்கள் வேறு கிடையா.

-ஸிட்னி ஸ்மித்

10