பக்கம்:உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

47


ஆன்ம அபிவிருத்தி- மனிதனைப் பரிபூரண மாக்குவதே அதன் லட்சியம். அதனால் அது சரீர வாழ்வை யெல்லாம் சாதனமாகத் தாழ்த்திவிடும்.

-எமர்ஸன்

★ ★ ★


12. இலட்சியம்

இலட்சியம் இல்லாத மனிதன் திசையறி கருவி இல்லாத கப்பலை யொப்பான்.

- ஆவ்பரி

மேல் நோக்காதவன் கீழேயே நோக்குவான். உயரப் பறக்கத் துணியாத ஆன்மா ஒருவேளை தரையில் புரளவே விதிக்கப்பட்டிருக்கும்.

-பீக்கன்ஸ்பீல்டு

தாழ்ந்த இலட்சியத்தில் ஜெயம் பெறுவதைவிட உயர்ந்த இலட்சியத்தில் தோல்வியுறுவதே சிலாக்கியம்.

- ராபர்ட் பிரெளணிங்

எவ்விதம் இறந்தான் என்பதன்று கேள்வி- எவ்விதம் வாழ்ந்தான் என்பதே கேள்வி.

-டாக்டர் ஜான்ஸன்

தன் சக்திகளிலிருந்து சாத்தியமான அளவு சாறு பிழியவே ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கை இலட்சியமாயிருத்தல் அவசியம்.

-ரிக்டர்

உழைப்பு, துக்கம், மகிழ்ச்சி-இம்மூன்றையும் மனிதன் அநுபவிக்கப் பிறந்தவன். இந்த மூன்றுமில்லாத வாழ்வு சரியான வாழ்வாகாது.

-பழமொழி

மானிட உள்ளத்தின் தலைசிறந்த சிருஷ்டிகள் கூடப் பரிபூரணத்தில் மிகக் குறைந்தவை என்பது முற்றிலும் நியாயம்.

-வாவனார்கூஸ்