பக்கம்:உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

உலக அறிஞர்களின்


நூலறிவு அதிகம் கற்று விட்டதாக அகத்தில் கர்வம் கொள்ளும். மெய்ஞ்ஞானம் இன்னும் அறிய வேண்டியது அதிகம் என்று தாழ்ச்சி சொல்லும்.

-கெளப்பர்

சாக்கடை நீரில் குப்பையைக் காண்பதா, அல்லது வானத்தைக் காண்பதா? -உன் இஷ்டம்.

-ரஸ்கின்

மெய்ஞ்ஞானம் கடவுளிடம் அடக்கத்தையும், ஜீவர்களிடம் அன்பையும், தன்னிடம் அறிவையும் உண்டாக்கும்.

-ரஸ்கின்

அறிவுள்ள பிராணியாயிருப்பதில் அதிக செளகரியமே. அதைக்கொண்டு விரும்பியது எதற்கும் காரணம் சிருஷ்டித்துவிடலாம் அல்லவா?

-பிராங்க்லின்

தன் உபயோகத்திற்கும் அவசியத்திற்கும் அறிந்துகொள்ள வேண்டிய விஷயங்களை அறிந்து கொள்ளாதவன் வேறு எவற்றை அறிந்திருந்தாலும் அறிவில்லாதவனே ஆவான்.

-டிலட்ஸன்

யோசனை செய்யாதிருக்கக்கூடிய இடம் மரண சயனம் ஒன்றே. ஆனால் யோசனை செய்வதை அந்த இடத்திற்காக ஒருபொழுதும் விட்டுவைக்கக் கூடாது.

- ரஸ்கின்

அறிவின் முன்னணியில் போர் புரிவோர்க்குப் பெரும்பான்மையோர் ஆதரவு ஒரு நாளும் கிடைப்பதில்லை.

-இப்ஸன்

ஒன்றும் அறியாதவன் தான் கற்றுக்கொண்டதைப் பிறர்க்குக் கற்றுக் கொடுப்பதாய் நம்பிக்கொள்கிறான். அதிகம்