பக்கம்:உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/6

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

1. அன்பு

அழுது கொண்டே பிறக்கின்ற உலகக் குழந்தைகள், இறுதியில் சிரித்துக் கொண்டே இறக்கும் வரைக்கும் வாழ்வியல் அறம் வகுத்துத் தந்துள்ள உலகப் பொதுமறையாளர் திருவள்ளுவர் பெருமான் அன்பு என்ற சுக உணர்வை எவ்வாறு புறம் காட்டுகிறார் என்று நோக்கலாமா? இதோ அவரது குறட்பாவின் பொழிவு!

அன்புள்ள உடல்தான் உயிருள்ளது; அதன் வழியில் நடந்து கொள்கிறவர்களது உடல்தான் உயிருள்ளது; அன்பில்லாத உடல் வெறும் தோலால் போர்த்தப்பட்ட எலும்புகளே. இவருடைய காலம் கி.மு. மறுபேச்சுக்கு உண்டா இடம்?

இப்சன் என்பவர் நார்வே நாட்டில் வாழ்ந்த ஒரு நாடக ஆசிரியர். அவர் பல நாடகங்கள் எழுதிப் புகழ்பெற்ற ஒரு புதுமைப் புரட்சியாளர். இவர் கி.பி. 1826-ஆம் ஆண்டில் பிறந்தார். 1906-ஆம் ஆண்டின் இடையில் இறந்தார். இவர், அன்பு என்ற தத்துவத்தைப் பற்றி என்ன எழுதியுள்ளார் தெரியுமா? இதோ: