பக்கம்:உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

உலக அறிஞர்களின்


கண் குருடு என்று இரங்குவதுபோலவே அறிவு சூனியம் என்பதற்கும் இரங்க வேண்டும்.

- செஸ்டர்பீஸ்டு

மூளையின் முன்புறம் (அறிவு) பின்புறத்தை (உணர்ச்சியை) உறிஞ்சி உலர்த்திவிடுமானால் கேடே. அறிவினால் மட்டுமே நம்மை பெற்றுவிட முடியாது. விசாலமான நெற்றிக்கே எப்பொழுதும் இறுதியில் வெற்றி. ஆனால் வெற்றி கிடைப்பது தலையின் பின்புறம் மிகப்பருமனாயுள்ள பொழுதே.

-ஜே.ஆர்.லவல்

அறிஞனுக்கு அனைத்துலகும் தாய்நாடே. சாந்தமான மனத்திற்கு எந்த இடமும் அரண்மனையே.

-லில்லி

அறிவிலி இடத்தையும் காலத்தையும் குறுக்க விரும்புகிறான். அறிஞனோ அவற்றை நீட்டவே விரும்புகிறான்.

-ரஸ்கின்

தனக்குத்தானே வழிகாட்டி என்னும் வண்ணம் போதுமான அறிவுடையார் யாருமிலர்.

-அக்கம்பிஸ்

வாழ்விடமிருந்தோ மக்களிடமிருந்தோ அதிகமாக எதிர் பாராதிருத்தலே மெய்யறிவின் ஜீவ அம்சமாகும்.

-மார்லி

ஏறிக்கொள்ள அசுரனுடைய தோள்கள் கிடைக்குமானால் குள்ளன் அசுரனைவிட அதிகத் துரம் பார்க்க முடியும்.

-கோல்ரிட்ஜ்

ஷேக்ஸ்பியர் என்னைவிட அதிக உயரமுள்ளவரே. எனினும் நான் அவரைவிட அதிகத் தூரம் பார்க்க முடியும். நான் அவருடைய தோள்களின் மேல் அல்லவோ நிற்கின்றேன்!

- பெர்னார்டு ஷா