பக்கம்:உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

உலக அறிஞர்களின்


தானே செய்யக்கூடியது எதையும் பிறர் செய்ய விடலாகாது.

-இப்ஸன்

★ ★ ★


18. துறவு

இந்த உலகில் மூன்று விதத் துறவுகள்:- அறிவையும் இன்பத்தையும் சமயத்துக்காக வெறுத்தால் சமயத்துறவு; அதிகாரத்துக்காக வெறுத்தால் போர்த்துறவு பணத்துக்காக வெறுத்தால் பணத்துறவு. இக்காலத்தில் காணப்படும் துறவு மூன்றாவதே.

-ரஸ்கின்

எனக்குத் துறவறத்தில் நம்பிக்கை இல்லை. ரோஜாச்செடியில் முட்களைப் போல் மலரும் அவசியமானதே. கடவுள் உடலை உண்டாக்கிய பொழுது அனாவசியமானது எதையும் அமைத்து விடவில்லை.

-பார்க்கர்

★ ★ ★


19. தனிமை

உயர்ந்த எண்ணங்களை உடையோர் ஒருபொழுதும் தன்னித்தவராகார்.

-ஸ்ர்பிலிப் ஸிட்னி

கொள்கை உறுதியாயிருப்பின் தனிமையாயிருப்பது தனிமையாகாது.

-அனர்பாஷ்

தன்னந் தனியாய் நிற்பவனைவிட அதிகச் சக்தி வாய்ந்தவன் உலகில் கிடையாது.

-இப்ஸன்