பக்கம்:உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/8

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

7



போராட்டக் குணத்தையும் மீறி, 'உண்மையான மனிதன் யாரையும் துவேஷிக்க மாட்டானாம்.'

அவன், பிரெஞ்சு சக்கரவர்த்தி அல்லவா? போர் வெறியன் என்றல்லவா உலகம் அவனைக் கணிக்கிறது. ஆனாலும் அவன் காட்டும் மனித அன்பைப் பாருங்கள்!

சிறந்த ஆங்கில இலக்கிய மேதையான ரஸ்கின், கி.பி.1819ஆம் ஆண்டு தோன்றி கி.பி.1900-மாவது வருடத்தில் மறைந்து, ஏறக்குறைய 81 ஆண்டுகளாக வைர வாழ்வு வாழ்ந்து காட்டிய அவர், அன்பு பற்றி என்ன பேசுகிறார்?

பெருந்தன்மையைக் காண்பதிலே, மற்றவர்களுக்கு அன்பு காட்டுவதிலே அதற்கேற்ப மன நெகிழ்வூட்டும் செயல்களைச் செய்து காட்டி மகிழ்ச்சி காண்பதே அன்பு என்ற கருணையின் அழகாகும் என்று நமக்குக் கூறி நமது வாழ்வை மேம்படுத்துகிறான். இல்லையா?

இந்த பேரறிஞனைப் போல அதே காலத்தில் வாழ்ந்த பெய்லி என்ற ஐரிஷ்காரன், அன்பு செய்பவர், பெரிய உண்மைகளை உணர்ந்து கூறுபவர், இவர்கள் எல்லாரும் கவிஞர்களே. எனவே, உண்மைகளில் எல்லாம் தலை சிறந்த உண்மை அன்பு தான்.

அறிவை எத்தனையோ பேர் விலைக்கு வாங்கி விடுகிறார்கள். ஆனால், உணர்ச்சி, அன்பு ஒரு நாளும் நான் தான் அன்பு வருகிறேன் என்று முரசு கொட்டிக் கொண்டு மக்கள் சந்தைக்கு வருவ்து கிடையாது என்கிறார் ஜே.ஆர்.லல்லி என்ற பேரறிஞர்.