பக்கம்:உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

உலக அறிஞர்களின்


மனிதனை அழிக்கக்கூடிய ஒரே விஷயம் அழிவில் நம்பிக்கை வைப்பதே.

- மார்ட்டின் பூபெர்

நல்ல காலம் பிறக்கும் என்ற நம்பிக்கை தவிர நலிவோர்க்கு வேறு மருந்து கிடையாது.

-ஷேக்ஸ்பியர்

காருக்குப்பின் வேனில், இரவுக்குப் பின் பகல்; புயலுக்குப் பின் அமைதி.

-அக்கம்பிஸ்

நம்பிக்கையே மனிதனுக்கு நேரும் சகல நோய்களுக்கும் ஒரே மலிவான சஞ்சீவி.

- கெளலி

இரவில் சஞ்சலம் ஏற்பட்டாலும் அநேக சமயங்களில் காலையில் எல்லாம் சரிப்பட்டுப்போகும்.

-ஆவ்பரி

நம்பிக்கையே துக்கத்தால் ஏற்பட்ட கறையைப் போக்கும்.

-மூர்

எல்லாமொழிகளிலும் அதிக துக்ககரமானவை- அப்படிச் செய்திருந்தால்'- என்னும் மொழிகளே.

-விட்டியர்

ஆகாயத்தில் கட்டும் அரண்மனைகளை அழியாது வைத்திருக்க அதிகமான பொருள் தேவை

-புல்வெர் லிட்டன்

நம்பிக்கை என்பது விழித்திருக்கும் நிலைமையில் காணும் கனவு.

-பிளினி

நம்பிக்கை என்பது ஒருநாளும் இதயத்திலிருந்து அழிந்து போவதில்லை. மனிதன் என்றும் ஆசீர்வதிக்கப்பட