பக்கம்:உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

உலக அறிஞர்களின்


எறும்பைப்போல் உபதேசிப்பவர் யாருமில்லை; ஆனால் எறும்போ பேசுவதே இல்லை.

-பிராங்க்ளின்

பயனில் சொல்லுக்குப் பொறுப்பாவதுபோல் பயனில் மெளனத்துக்கும் பொறுப்பாவோம்.

-பிராங்க்ளின்

நா தான் மனிதனிடமுள்ள நல்ல அம்சம் கெட்ட அம்சமும் அதுவேதான். அது நம் வசமானால் அதைவிட உயர்ந்த பொருளில்லை. நாம் அதன் வசமானால் அதைவிடத் தீய பொருளில்லை.

-அனார்காரிஸ்

பேச்சு பெரியதே. ஆனால் மெளனம் அதனினும் பெரியதாகும்.

-கார்லைல்

★ ★ ★


34. போற்றுதல்

நம்மை மெச்சுவாரையேயன்றி நாம் மெச்சுவாரை நாம் ஒருபொழுதும் நேசிப்பதில்லை.

-ரோஷிவக்கல்டு

பிறன் ஒருவனை அவன் விரும்பும் வண்ணம் மதித்தல் கடினமான காரியம்.

- வாவனார்கூஸ்

யாரையேனும் மதித்துத்தான் தீரவேண்டுமானால், அவர் பிழையின் சுமையைத் தாங்கும் விதத்தை வைத்து மதிக்க வேண்டுமேயன்றி, அவர் அச்சுமையை ஏற்படுத்திக்கொண்ட காரியத்தை வைத்து மதிக்கலாகாது.

-மார்லி

உன் தகுதி பிறர்க்குத் தெரிய வேண்டுமானால் பிறர் தகுதியை நீ அங்கீகாரம் செய்க.

-பழமொழி