பக்கம்:உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

99


தெய்வமே பெண்ணாக வந்தாலும் அவதூறு என்னும் நாய் அவளைப் பார்த்துக் குரையாமல் இராது.

-ஹோம்

அடுத்த வீட்டுக் காரனுடைய குறைகளை அம்பலப்படுத்த ஆசையாயுள்ள தினவுக்கு மருந்துமில்லை, மந்திரமுமில்லை.

-ஹார்வி

அவதூறு வாளினும் அதிகமான கூர்மையும், நாகத்தினும் அதிகமான விஷமும் உடையது. அது மூச்சு விட்டால் போதும், அரைக்கணத்தில் அகிலலோகமும் பரவிடும்.

-ஷேக்ஸ்பியர்

ஒரு மணி நேரம்கூட நாம் ஒருவர்க்கொருவர் அன்பாயிருக்க முடியவில்லை. சகோதரன் தவறு கண்டால் அதைப் பிறரிடம் ஊதுகிறோம், சாடை காட்டுகிறோம், நகைக்கிறோம், இளிக்கிறோம்-எவ்வளவுதான் நாம் நம் பெருமையைத் தூக்கி நிறுத்தினாலும் நாம் மனிதர்கள் ஒரு அற்பமான ஜாதியே.

-டெனிஸன்

★ ★ ★


37.சிரிப்பு

எதைக் குறித்து நாம் நகைக்கிறோமோ, அதைத் தவிர வேறெதுவும் நம்முடைய இயல்பைத் தெளிவாகக் காட்டமுடியாது.

-கதே

அதிகமான சிரிப்பு அறிவு சூன்யத்தையே காட்டும்.

-கோல்ட்ஸ்மித்