பக்கம்:உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102

உலக அறிஞர்களின்


மனிதர் இருதயத்தின் குணாதிசயங்களை எள்ளளவும் மதிப்பதில்லை. அறிவு, உடல்-இரண்டிலொன்றின் ஏற்றத்தையே போற்றுகின்றனர்.

-லா புரூயர்

ஜன சமூகங்கள் வாழலாம், அல்லது வாழாமல் மடியலாம். ஆனால் நாகரிகம் மட்டும் ஒருநாளும் மறைந்து விடாது.

-மாஜினி

ஒருவனை நாகரிகமாக்க விரும்பினால் அவனுடைய பாட்டியை நாகரிகமாக்க ஆரம்பிக்கவேண்டும்.

-விக்டர் ஹூகோ

நாகரிகம் உண்டாக்கத் தக்க நிச்சயமான வழி பெண்களின் செல்வாக்கே.

-எமர்ஸன்

நாகரிகத்தின் உச்சிப் பொழுது வந்துவிட்டதாக எண்ணுகிறோம். ஆனால் இப்பொழுதுதான் கோழி கூவும் சமயம்.

-எமர்ஸன்

காட்டு மிருகமாயிருக்கும் மனிதன் வீட்டு மிருகமாக ஆக்குவதே நாகரிகத்தின் பயன்.

-நீட்சே

சமூகத்தின் நாகரிகம் சமூகத்தை வைத்தன்றிச் சான்றோரை வைத்தே மதிக்கப்பெறும். சான்றோர் இல்லையெனில் நாகரிகமும் இல்லை.

-பழமொழி

★ ★ ★


39. செல்வம்

செல்வம் என்பது நம்மை வறுமை என்னும் ஒரே ஒரு தீமையினின்று தான் காப்பாற்ற இயலும்.

-ஜாண்ஸன்