பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 Ftଳ உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் உணர்ச்சிகள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஒவ்வொரு மனித இதயமும் ஒரு தனி உலகம் அதன் அனுபவம் மற்றவர் களுக்குப் பயன்படாது. அ புல்வெர் அநேகமாக எல்லா மனிதர்களும் ஒவ்வோர் உணர்ச்சியையும் ஒரளவு பிறப்பிலேயே பெற்றுள்ளனர். ஆனால், ஒவ்வொரு வருடைய உணர்ச்சிகளிலும் ஓர் உணர்ச்சி மட்டும் முனைப்பாக நிற்கும். இதை நாம் கண்டுபிடிக்க வேண்டும். இந்த முதன்மையான உணர்ச்சி சம்பந்தப்பட்ட மட்டில், ஒருவனை நாம் நம்பியிருக்கக்கூடாது. க் செஸ்டர்ஃபீய்ட் உணர்ச்சித் துண்டுதல் y'r பொதுவாக மனிதர் அனைவரும் உணர்ச்சித் துண்டுதலால் உந்தப்படுகின்றனரே அன்றித் தத்துவத்தை ஆராய்ந்து நடப்பதில்லை. எனவே, நாம் கருதுவது போல அவர்கள் மிகவும் நல்லவர்களாகவோ மிகவும் தீயவர்களாகவோ இருப்பதில்லை. அ ஹேர் நம்முடைய முதல் உணர்ச்சிகள் நல்லவை. தாராளப் போக்குள்ளவை: வீரம் நிறைந்தவை. பின்னால் செய்யும் சிந்தனை அவைகளைப் பலவீனமாக்கி வதைத்துவிடுகின்றது. அ எல். ஏ. மார்ட்டின் உங்கள் உணர்ச்சிகளின்படி நடவுங்கள், ஆனால், அவைகளை நல்ல வழிகளில் செலுத்தும்படி இறைவனை வேண்டிக் கொள்ளுங்கள். அ. இ. டென்னென்ட் உணர்ச்சியின்மை 六 மற்றவர்களுடைய துன்பங்கனை உணர முடியாதவன் மனித உருவத்திலுள்ள விலங்காவான். அ ஜூவெனல்