பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப. ராமஸ்வாமி : 199 = உன்சொற்கள் எப்படி இருக்கின்றனவோ. அந்த அளவுக்கு உன் அன்பு மதிக்கப்பெறும் உன் அன்பின் தன்மைக்கு ஏற்றபடி உன் செயல்கள் இருக்கும். உன் செயல்களுக்கு ஏற்றபடி உன் வாழ்க்கை இருக்கும். அ. சாக்ரடிஸ் சொற்கள் சுருங்கினால், பயன் வீணாவதில்லை. க ஷேக்ஸ்பியர் ஆயிரம் சொற்கள் சேர்ந்தாலும், ஒரு செயலைப் போல் மனங்களில் பதிவதில்லை. ைஇப்ஸன் ஒரு மனிதன் ஒரு செயலைச் செய்ய வேண்டாமென்று நீ கருதினால், அதைப்பற்றி அவனைப் பேசும்படி செய்; ஏனெனில், மனிதர்கள் எவ்வளவு அதிகமாய்ப் பேசுகின்றனரோ, அந்த அளவுக்கு அவர்கள் வேறு எதையும் செய்வதில்லை. சொற்பொழிவுக் கலை மற்றவர்களைத் துண்டும்படியான பொலிவுடன் ஒரு பேச்சாளன் இருக்க வேண்டும் என்பது பேச்சுக்கலையின் முதல் விதி. அதைச் செய்யவல்லது அவனுடைய வாழ்க்கையே. அ பிைபைரோ சுருக்கமாகப் பேசுவதில் ஒவ்வொரு மனிதனும் பயிற்சி பெறவேண்டும். நீண்ட பேச்க்கள் பேசியவனுக்குத் திருப்தியளிக்கலாம்; ஆனால், கேட்பவர்களுக்குச் சித்திரவதை ஆகும். அ ஃபெல்ட்ஹாம் பற்பல பேச்சாளர்கள் தங்கள் பேச்சில் ஆழமில்லை என்பதற்குப் பதிலாக, நீளத்தைக் கூட்டிவிடுகிறார்கள். அ மாண்டெஸ்கியு உண்மையான பேச்சுத் திறனுக்கு ஈடான ஆற்றலில்லை. லிலர் மக்களின் அச்சங்களைக் கிளறிவிட்டு அவர்களை அடக்கி ஆண்டு வந்தார். ஸிலரோ அவர்களுடைய அன்பைக் கவர்ச்சி செய்து உணர்ச்சிகளை ஆண்டு வந்தார். nஸரின் செல்வாக்கு