பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* * 206 : உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் தவறுகள்

  • எந்த மனிதனும் தவறு செய்யக்கூடும்; ஆனால், முட்டாளை,

தவிர வேறு எவனும் அதைத் தொடர்ந்து செய்ய மாட்டான். எலிலரே تعتبر * எந்த மனிதனும் பல தவறுகளையும். பெரிய தவறுகளையும் செய்யாமல் பெருமையுடையவனாகவோ, நல்லவனாகவே ஆனதில்லை. அ. கிளாட்ஸ்டன்

  • குற்றமே செய்யாமல் இருப்பவர்கள் இறந்து போனவர்களே.

அ லேலண்ட்

  • விஞ்ஞானம் முழுவதிலும் தவறுதான் உண்மைக்கு முன்னால் செல்லும். உண்மைக்குப் பின்னால் கடைசியாக நிற்காமல், அது முன்னால் போவதே நலம். அ வால்போல்
  • கீழே விழாமல் இருத்தல் நமக்குப் பெரிய பெருமையன்று ஆனால், விழுந்த பொழுதெல்லாம் எழுந்திருத்தலே பெருமை. அ கன்ஃபூவியல்
  • தெரியாமல் செய்த பிழைக்கு நாம் அனுதாபம் காட்ட வேண்டும்.

ஏளனம் செய்யக்கூடாது. ைசெஸ்டர்ஃபீல்ட் தற்கொலை 女 தானாகச் சாகத் துணிந்தவன் தைரியமுள்ளவன் துக்கத்தைத் தாங்குபவனே வீரன். ைமாலிைங்கர் தற்கொலை, கோழைத்தனத்திலிருந்து சில சமயங்களில் உண்டாகிறது. ஆனால், எப்பொழுதும் அல்ல; அநேகர்சாவதற்கு அஞ்சி உயிர் வாழ்கின்றனர். அநேகர் வாழ்வதற்கு அஞ்சி உயிரை விடுகின்றனர். A கோல்டன்