பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப. ராமஸ்வாமி : 233 , நன்றியின்மை வீரத்திற்குவிடமாகும். A ஸi.பி.லிட்னி நாகரிகம் நாகரிகம் என்பது மனித சமூகம் மேல் நோக்கிச் செல்வதற்கான போராட்டமாகும். அதில் பத்து இலட்சக்கணக்கானவர்கள் மிதித்து நசுக்கப்படுகிறார்கள். அவர்களின் உடல்களை மிதித்துக் கொண்டு ஆயிரக்கணக்கானவர்கள் மேலே செல்கின்றார்கள். அ பால்ஃபோர் சமூகங்கள். தனி நபர்களைப்போல் வாழ்கின்றன அல்லது மடிகின்றன. ஆனால், நாகரிகம் அழிய முடியாது. அ மாஜினி நாகரிக நடை ஒழுக்கத்திற்கும். காலத்திற்கேற்ற நடைக்கும் மிக நெருங்கிய சம்பந்தம் உண்டு. நமது கற்பனையில்தான் நாம் அவற்றைப் பிரித்து எண்ணுகிறோம். அ எலிபெரோ ஒருவன் எங்கு தங்கியிருக்கிறானோ அந்த இடத்திலுள்ள நாகரிக நடையை மேற்கொள்ள வேண்டும் என்பது விதிகளுக்கெல்லாம் மேலான விதி, சட்டங்களுக்கெல்லாம் மேலான பொதுச் சட்டம்.

ைமாண்டேயின்

நாகரிக நடை என்பது வெளித் தோற்றங்களுக்கு உரிய கலை. அது ஒருவருக்குக் காலத்திற்கேற்ற தோற்றத்தைப்பற்றி ஆசை உண்டாக்கும். அ சேபின் ஒவ்வொரு தலைமுறையும் பழைய நாகரிக முறைகளை ஏளனம் செய்து சிரிக்கின்றது. ஆனால், புதிய முறைகளையே கண்டிப் பாகப் பின்பற்றுகின்றது. உ தோரே