பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 : உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் நீதிக் கதைகள் Yo நீதிக் கதைகள், போதனை செய்தவன் கடுமையைக் குறைத்து விடுகின்றன. ஆனால், அதை மறைத்து விருப்பமான வருவத்தில் போதித்துவிடுகின்றன. A அடிஸள் நீதி வாக்கியங்கள் A. IDւո M வாழ்க்கையை முறைப்படுத்திக்கொள்ளவும், உணர்ச்சிகளை நிதானப்படுத்திக்கொள்ளவும் நீதி வாக்கியங் களை விதித்து அருளியவன். இப்பொழுது மட்டுமன்றி, பின்வரும் தலைமுறைகளிலும் மனித இயற்கைக்குப் பெரிய நன்மையைச் செய்தவனாவான். க. லெனிகா செய்வதற்கு எது நல்லது என்று தெரிந்துகொள்வதைப் போலச் செய்வதும் அவ்வளவு எளிதாக இருந்தால், வீட்டுக் கோயில்களெல்லாம் பெரிய மாதாகோயில்களாகிவிடும். ஏழை மனிதர்களின் குடிசைகளெல்லாம் அரசர்களின் அரண்மனை வளாகிவிடும். ஒரு சமய குரு தாமே தம் உபதேசங்களின்படி நடந்தால் நல்லதுதான். செய்வதற்கு எது நல்லது என்பதை நான் இருபது பேர்களுக்கு எளிதாகக் கற்றுக்கொடுக்க முடியும். ஆனால், அந்த இருபது பேர்களுள் ஒருவனாக இருந்து என் உபதேசங்களின்படி நடப்பதுதான் அகைவிடக் கடினம் - அ ஷேக்ஸ்பியர் நல்ல உபதேசங்களைச் செய்பவர் அவைகளின்படி நடக்காவிட்டால், அவர் வெளி வேட்க்கார்ரென்று பொதுவாகக் கூறுவN வழக்கம். இது அநீதியாகக் குற்றம் சாட்டுவதாகும். அவர் தம் உணர்ச்சிகளை அடக்கிக்கொள்வதன் நன்மைகளை உண்மையிலேயே நம்பியிருப்பர். ஆன்ால், அதில் அந்தச் சமயம் அவர் வெற்றி பெறாமலிருக்கலாம்; ஒரு கடல்யாத்திரை