பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 : உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் -

  • ஒரு நாட்டின் முக்கியமான பெருமை அதன் ஆசிரியர்களிட மிருந்தே வருவதாக ஜான்ஸன் கூறுகிறார். ஆனால், அவர்கள் ஞானக் களஞ்சியங்களை அளிக்கும் பொழுதுதான் இந்த உரை பொருந்தும். அவர்கள் ஒழுக்கத்தைப் போதிக்காவிடில், அவர்கள் புகழுக்கு உரியவர்களாயில்லாது, கண்டனத்திற்கே அதிகமாக உரியவர்கள். அ ஜேன் போர்ட்டர் * எழுத்தில் பதியத்தக்க புகழுள்ள காரியங்களைச் செய்வதற்கு அடுத்தபடியாக, ஒரு மனிதனுக்குப் பெருமையோ இன்பமோ அளிக்கும் விஷயம் படிக்கத்தக்கவைகளை எழுதுவதாகும்.

செஸ்டர்ஃபீல் آت.

  • நூலாசிரியராக விளங்குவதில் மூன்று கஷ்டங்கள் இருக்கின்றன. வெளியிடத்தக்க விஷயம் எதையாவது எழுதுதல், அதை வெளியிடக் கண்ணியமான மனிதரைக் கண்டுபிடித்தல், அதைப் படிக்கப் புத்திசாலிகளான வாசகர்களைப் பெறுதல்.க. கோல்டன் +'r ஆசிரியராவதற்கு அறிவுத்திறன் மட்டும் போதாது நூலுக்குப் பின்னால் ஒரு மனிதன் இருக்கவேண்டும். அ எமர்ஸள் * பெரிய ஆசிரியர் தம் வாசகர்களுக்கு நண்பராகவும் நன்மை செய்பவராகவும் விளங்குகிறார். அ மெகாலே
  • ஆசிரியர்கள் உயிரோடிருக்கும் பொழுது அவர்களை ஏளனம்

செய்து கண்டிப்பார்கள் இறந்த பிறகு புகழ்வார்கள். - அ வால்டேர்

  • ஒவ்வோர் ஆசிரியரும் தாம் விரும்பாவிடினும் தம் நூல்களில்

தம்மை ஓரளவு சித்திரிக்கிறார். அ. கதே நூல் நிலையங்கள்

  • இந்தக் காலத்தில் உண்மையான பல்கலைக் கழகம் என்பது நூல்கள் நிறைந்த நூல் நிலையமே. அ. கார்லைல்