பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27() H. 女 女

உலக அறி.கு சிந்தனைக் களஞ்சியம்

- பிரார்த்தனை என்பதைச் சுருக்கமாக விளக்கினால், அது நமது விருப்பத்தைக் கடவுள் பக்கமாகத் திருப்புவதாகும். பி புருக்க நம்முடைய பிரார்த்தனைகள் பொதுவான ஆசிகளை வேண்டியிருக்க வேண்டும். ஏனெனில், நமக்கு எவை நன்மையானவை என்பதைக் கடவுளே அறிவார். சாக்ரடின் நாம் கடவுளிடம் எதை வேண்டிக்கொண்டாலும், நாமும் அதற்காக உழைப்போம். வி ஜெரிமி டெய்லர் கடவுள் நம்மிடமிருந்து தொலைவில் இருக்கிறார். ஆனால் பிரார்த்தனை. அவரை நம்முடைய பூமிக்குக் கொண்டுவந்து நம் முயற்சிகளோடு இணைத்துவிடுகின்றது. க திருமதி டி. காஸ்பரின் சொற்கள் குறைந்துள்ள பிரார்த்தனை மேலானது. அ லூதர் காலையில் கடவுளைவிட்டு ஓடியவன் அன்று முழுவதும் அவரைக் கண்டுபிடிக்கமாட்டான். அ பனியன் நம் பிரார்த்தனைகள் காலையும் மாலையும் மேலே எழவேண்டும். நமது நாள்கள் கடவுளில் ஆரம்பித்துக் கடவுளிலே முடியவேண்டும். அ. சானிங் பொறுமைதான் மிக உயர்ந்த பிரார்த்தனை. ைபுத்தர் ஆன்மா பிரார்த்தனை என்ற சிறகைக் கொண்டு வானுலகுக்குப் பறந்து செல்கின்றது. தியானந்தான் நாம் கடவுளைக் காணும் கண். - அ. அம்ப்ரோஸ் பிரார்த்தனையில் 'சொற்களில்லாத இதயம். இதயமில்லாத சொற்களைவிட மேலானது. பைனியன் உங்களுடைய வேலைகளைத் தொடங்கு முன்னால் அவைகளை வெற்றிகரமாக முடிப்பதற்காக ஆண்டவனைப் பிரார்த்தனை செய்யுங்கள். - அ லென.போன்