பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் ★ புகழ் என்பது என்ன? ஜனங்கள் உன்னைத் தெரிந்துகொள்ளும் நன்மை; ஆனால், அவர்களைப்பற்றி உனக்கு ஒன்றும் தெரியாது. அவர்களைப்பற்றி உனக்குக் கவலையும் கிடையாது. அ எல்டானிஸ்லாஸ் புகழைத் தேடி அலைவதைப் போன்ற சிரமமான வேலை உலகில் வேறில்லை. நீ திட்டம் தயாரிப்பதற்குள்ளேயே வாழ்க்கை முடிந்துவிடுகின்றது. A புருயெர் நல்ல சீலமுள்ள பெரிய மனிதனுக்கு உலகில் புகழ் உரியது. அவன் நினைவைச் சரித்திரம் போற்றுகின்றது. அது மக்களின் ஒழுக்கத்தை நெறிப்படுத்துகின்றது. அவனுடைய சொற்களும் செயல்களும் மக்களின் வாழ்க்கையில் கலந்து விளங்குகின்றன. அ. இ. எவரெட் விரைவிலே புகழ் பெற்றுவிட்டவன் தன் பெயரைக் காப்பாற்றிக் கொள்வது பெரிய பாரந்தான். A வால்டேர் புகழின் கோயிலில் செல்வம் மிகுந்த மூடர்களுக்கும். கெஞ்சிக் கேட்கும் போக்கிரிகளுக்கும். மனித சமூகத்தை அரிந்து தள்ளும் கொலைகாரர்களுக்கும் இடம் கிடைத்துவிடுகின்றது. அ எபிம்மெர்மள் இறந்துபோன மனிதனின் இதயத்தின் மேல் வைக்கப்பெறும் மலர், புகழ். அ. மதர்வெல் செத்த பிறகுதான் புகழ் வருமென்றால், எனக்கு அதைப்பற்றிய அவசரம் எதுவுமில்லை. ைமார்ஷியன் புகழ் நெருப்பைப் போன்றது. அதை மூட்டிவிட்டால் பிறகு காப்பது எளிது. ஆனால், அதை மூட்டுவது கடினம்.அ பேக்கன் இந்த வாழ்க்கையில் அடையும் பேறுகளுள் புகழே முதன்மை யானது உடல் மண்ணுக்குள் போன பின்பு பெருமையுள்ள பெயர் மட்டும் உயிருடன் வாழ்ந்து வருகின்றது. அ வில்லர்